‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது 
தற்போதைய செய்திகள்

நிவின் பாலி - நயன்தாராவின் ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ படப்பிடிப்பு நிறைவு!

நிவின் பாலி - நயன்தாராவின் புதிய படம் குறித்து...

DIN

நடிகை நயன்தாரா மற்றும் நடிகர் நிவின் பாலி ஆகியோர் நடித்து வந்த ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

இயக்குநர்கள் சந்தீப் குமார் மற்றும் ஜார்ஜ் பிலிப் ராய் ஆகியோரின் இயக்கத்தில் நயன்தாரா மற்றும் நிவின் பாலியின் நடிப்பில் டிராமாவாக உருவாகி வரும் ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்ததாக அதன் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து, வெளியான விடியோ பதிவை இந்த திரைப்படத்தின் கதாநாயகன், கதாநாயகி மற்றும் இயக்குநர்கள் தங்களது இன்ஸ்டாகிராம் சமூகவலைதளத்தில் ஒன்றாக பகிர்ந்துள்ளனர்.

இதையும் படிக்க: கிரிக்கெட்டர் ஜெயசூர்யாவை சந்தித்த ரவி மோகன்!

நடிகர் நிவின் பாலியின் பாலி ஜூனியர் பிக்சர்ஸ் மற்றும் மாவெரிக் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு முஜீப் மஜீத் இசையமைக்கின்றார்.

முன்னதாக, கடந்த 2019 ஆம் ஆண்டு மலையாள இயக்குநர் தயான் ஸ்ரீனிவாசனின் ‘லவ் ஆக்‌ஷன் டிராம்’ திரைப்படத்தில் நயன்தாராவும், நிவின் பாலியும் ஜோடியாக நடித்திருந்தனர்.

அதன் பின்னர், தற்போது ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ திரைப்படத்தில் அவர்கள் இணைந்துள்ளது ஜனவரில் வெளியிடப்பட்ட முதல் பார்வை போஸ்டரில் உறுதியானது.

மேலும், இந்த திரைப்படத்தில் நடிகர்கள் தீப்தி, சுபத்ரா ராபர்ட் மற்றும் கிரண் கொண்டா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

SCROLL FOR NEXT