பெரியகுளம் அருகே அரசுப் பேருந்து மோதியதில் பலியான 15 நாட்டு மாடுகள். 
தற்போதைய செய்திகள்

பெரியகுளம் அருகே அரசுப் பேருந்து மோதி 15 மாடுகள் பலி

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே அரசுப் பேருந்து மோதி 15 நாட்டு மாடுகள் பலியானது.

DIN

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே அரசுப் பேருந்து மோதி 15 நாட்டு மாடுகள் பலியானது.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே தம்மிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் தனசேகரன். நாட்டு மாடுகளை வளர்த்து வரும் இவர், பெரியகுளம் அருகேயுள்ள ஜல்லிபட்டி பகுதியில் 40-க்கும் மேற்பட்ட மாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் வேறு பகுதியில் மேய்ச்சலுக்காக புதன்கிழமை இரவு டி.கள்ளிப்பட்டி அருகே புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்த போது, தேனியிலிருந்து திண்டுக்கல்லுக்கு சென்ற அரசுப் பேருந்து மாடுகள் மீது மோதியது.

இதில், 14 பசு, 1 காளை என 15 மாடுகள் சம்பவ இடத்திலேயே பலியானது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கால்நடை பராமரிப்புத்துறை பெரியகுளம் கோட்ட உதவி இயக்குநர் அப்துல் ரஹ்மான் தலைமையிலான கால்நடை மருத்துவர்கள் வியாழக்கிழமை காலை சம்பவ இடத்திற்கு சென்று மாடுகளை மீட்டு உடற்கூறு ஆய்வு செய்தனர்.

இது குறித்து தென்கரை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேமுதிக அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

அரசன் புரோமோ தேதி!

தில்லி: முந்திரி திருட்டு வழக்கில் 4 பேர் கைது, 440 கிலோ மீட்பு

கனரா வங்கியில் பட்டதாரிகளுக்கு உதவித்தொகையுடன் தொழில்பழகுநர் பயிற்சி!

அக். 16 - 18ல் வடகிழக்கு பருவமழை தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

SCROLL FOR NEXT