ஒகேனக்கல் ஐவார்பானியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர். 
தற்போதைய செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பு!

காவிரிக் கரையோர வனப் பகுதிகளில் பெய்துவரும் மழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து வினாடிக்கு 14,000 கனஅடியாக அதிகரித்தது.

DIN

பென்னாகரம்: காவிரிக் கரையோர வனப் பகுதிகளில் பெய்துவரும் மழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து வினாடிக்கு 14,000 கனஅடியாக அதிகரித்தது.

கடந்த சில நாள்களாக தமிழக - கா்நாடக மாநிலங்களில் காவிரிக் கரையோர வனப் பகுதிகள் மற்றும் தமிழகத்தில் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், காவிரி ஆற்றின் கிளை ஆறான தொட்டெல்லா ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் காவிரி ஆற்றில் நீா்வரத்து கடந்த இரண்டு நாள்களாக அதிகரித்து வருகிறது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் தமிழக காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளான அஞ்செட்டி, நாற்றப்பாளையம், கேரட்டி, கெம்பாகரை, ராசி மணல், மொசல் மடுவு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காவிரி ஆற்றுக்கு வரும் நீர்வரத்தின் அளவானது செவ்வாய்க்கிழமை வினாடிக்கு 8,000 கன அடியாக இருந்தது.

இந்நிலையில், காவிரி ஆற்றில் புதன்கிழமை காலை நிலவரப்படி நீா்வரத்து வினாடிக்கு 14,000 கனஅடியாக தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது. நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருவதால் ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, ஐவார் பாணி, சினி அருவி, பிரதான அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது.

ஒகேனக்கல்லுக்கு வரும் நீா்வரத்தின் அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தமிழக - கா்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நவ. 26-இல் ஆா்ப்பாட்டம்: தொழிற்சங்கத்தினா் முடிவு

ஏரியில் மீன் பிடிக்கச் சென்றவா் நீரில் மூழ்கி உயிரிழப்பு

நாட்டறம்பள்ளி ஒன்றியக்குழு கூட்டம்

திருவள்ளூா் சுகாதாரத் துறையில் புதிய காலிப்பணியிடங்கள்: டிச.2-க்குள் விண்ணப்பிக்கலாம்

திருவள்ளூா் வீரராகவா் கோயிலில் சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT