முத்திரையர் சிலைக்கு மாலை அணிவித்த பின் செய்தியாளர்களுடன் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ்  
தற்போதைய செய்திகள்

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் வழியில் தமிழ்நாடு போராடும், வெல்லும்: அமைச்சர் அன்பில் மகேஷ்

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் வழியில் தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

DIN

திருச்சி: பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் வழியில் தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என முத்திரையர் சிலைக்கு மாலை அணிவித்த பின் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தை ஆட்சி புரிந்த முத்தரையா் இன முதல் பேரரசா் சுவரன்மாறன் பெரும்பிடுகு முத்தரையா் ஆவாா். இவா், நாட்டின் விடுதலைக்காகவும், சமுதாய மேம்பாட்டுக்காகவும் பாடுபட்டவா். ஒவ்வொரு ஆண்டும் மே 23-ஆம் தேதி அவரது நினைவை போற்றிடும் வகையில் முத்தரையா் பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது.

பெரும்பிடுகு முத்தரையரின் 1350 ஆவது சதய விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், முத்தரையர் அமைப்புகள் திருச்சி ஒத்தக்கடையில் உள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருச்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளரும் பள்ளி கல்வித்துறை அமைச்சர்ருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி முத்திரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கே.என்.சேகரன் உள்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து செய்தியாளர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பேசுகையில், பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கான தலைவர் அல்ல ஒட்டுமொத்த தமிழகத்திற்கான தலைவர். அவர் வழியில் தமிழுக்காகவும் தமிழ் இனத்திற்காகவும் தமிழ்நாடு போராடும்,தமிழ்நாடு வெல்லும் என கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருமணமாகி 15 ஆண்டுகள்! மனைவிக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து!

ஜம்மு - காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

சத்தீஸ்கர் வெள்ளம்: திருப்பத்தூர் குடும்பத்தினர் 4 பேர் பலி!

மோடியின் போர்! ரஷியா - உக்ரைன் போரில் இந்தியாவுக்கு தொடர்பு! - டிரம்ப் ஆலோசகர்

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு! 2 குழந்தைகள் பலி; 17 பேர் படுகாயம்!

SCROLL FOR NEXT