பேரிடர் மீட்புப் படை வீரர்கள் கோப்புப்படம்
தற்போதைய செய்திகள்

கோவை, நீலகிரிக்கு அதிகனமழை எச்சரிக்கை: தயார் நிலையில் பேரிடர் மீட்புப் படை

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த 70 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

DIN

கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் உள்ளனர்.

நிகழாண்டில் தென்மேற்கு பருவமழை எதிா்பாா்த்ததைப்போல கேரளத்தில் மே 25-ஆம் தேதி தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் நிலவுகின்றன. தொடா்ந்து தமிழகத்தில், மேற்கு தெடா்ச்சி மழை மாவட்டங்களிலும் பரவலாக மழைபெய்ய வாய்ப்புள்ளது.

இதன் காரணமாக, தமிழகத்தில் மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் சனிக்கிழமை (மே 24) முதல் மே 27-ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளது.

ஆரஞ்ச், சிவப்பு எச்சரிக்கை: குறிப்பாக, சனிக்கிழமை (மே 24) கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களிலும், மே 25, 26-ஆம் தேதிகளில் திண்டுக்கல், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மே 25, 26 ஆகிய தேதிகளில் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு (210 மி.மீ.க்கும் அதிகமாக) வாய்ப்புள்ளதால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த 70 வீரர்கள் மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த 90-க்கும் மேற்பட்ட வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

இவர்கள் 30 பேர் கொண்ட குழுக்களாகப் பிரிந்து பணியாற்றுவார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிவிஎஸ் ரைடர் 125: டூயல் டிஸ்க் பிரேக் வேரியண்ட் அறிமுகம்!

0/2-லிருந்து 164/7... தனியாகப் போராடிய ருதுராஜ்! குவியும் வாழ்த்துகள்!

மகாராஷ்டிர முதல்வர் முன்னிலையில் 61 நக்சல்கள் சரண்!

ஐபிஎஸ் அதிகாரி பூரண் குமார் தற்கொலை விவகாரம்: பிரேதப் பரிசோதனை முடிந்து உடல் தகனம்!

கரூர் விவகாரத்தில் காட்டிய அக்கறை ஏன் கிட்னி முறைகேடு விவகாரத்தில் இல்லை? - EPS கேள்வி

SCROLL FOR NEXT