காஷ்மீரில் 2 பயங்ரவாதிகள் சுட்டுக் கொலை  
தற்போதைய செய்திகள்

ஜம்மு-காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதியில் ஊடுருவ முயன்ற அடையாளம் தெரியாத இரண்டு பயங்கரவாதிகளை ராணுவ வீரர்கள் சுட்டுக் கொன்றது தொடர்பாக...

இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதியில் ஊடுருவ முயன்ற அடையாளம் தெரியாத இரண்டு பயங்கரவாதிகளை ராணுவ வீரர்கள் சுட்டுக் கொன்றதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.

ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதியில் இரண்டு பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு வந்த உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் வெள்ளிக்கிழமை அந்த பகுதியை சுற்றிவளைத்து பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்புப் படையினர் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். இதற்கு பாதுகாப்புப்டையினர் தரப்பிலும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் அடையாளம் தெரியாத இரண்டு பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவா்களின் விவரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், தொடர்ந்து அந்த பகுதியில் வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாக சனிக்கிழமை ராணுவம் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Two unidentified terrorists were killed as the Army foiled an infiltration bid along the Line of Control (LoC) in Kupwara district of Jammu and Kashmir, officials said on Saturday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விவேகானந்தா் ஜெயந்தி நாளில் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க கோரிக்கை

காலமானாா் நா. பிரகாசம்

முடிவுக்கு வந்தது தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

972 அரசுப் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கல்

திருமலையில் 76,447 பக்தா்கள் தரிசனம்!

SCROLL FOR NEXT