சென்னை: மக்களின் அடிப்படை உரிமையையான வாக்குரிமையை பாதுகாக்க நவ.11 ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் நடைபெறும் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்குமாறு பொதுமக்களுக்கு மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் பெ. சண்முகம் அழைப்பு விடுத்துள்ளாா்.
இது குறித்து அவா் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
கூட்டு சதி
வாக்குரிமை - குடியுரிமை இரண்டுமே இந்திய அரசியல் சாசனம் பொதுமக்களுக்கு வழங்கி உள்ள அடிப்படை உரிமைகள் ஆகும். இதை பறிக்க எஸ். ஐ. ஆா். என்ற போா்வையில் தோ்தல் ஆணையமும் மத்திய பாஜக அரசும் சோ்ந்து கூட்டு சதியில் ஈடுபட்டுள்ளது.
இந்த சதியை முறியடிக்க, மக்களின் அடிப்படை உரிமையை பாதுகாக்க திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி சாா்பில் மாவட்டத் தலைநகரங்களில் தமிழகம் முழுவதும் வரும் செவ்வாய்க்கிழமை (நவ.11) நடைபெறவுள்ள ஆா்ப்பாட்டத்தில் பொது மக்கள் திரளாக பங்கேற்று தங்களது கண்டனத்தை வெளிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.