கள்ளக்குறிச்சி: தியாகதுருகத்தில் மின்சாரம் பாய்ந்து இரு இளைஞர்கள் சனிக்கிழமை இரவு பலியாகினர்.
கள்ளக்குறிச்சியை அடுத்த தியாகதுருகம் அண்ணாநகரில் வாட்டர் சர்வீஸ் நிலையம் வைத்து உள்ளவர் ஷாஷன். இவரது வாட்டர் சர்வீஸ் நிலையத்தில் தியாகதுருகம் கரீம்ஷா தக்கா பகுதியைச் சேர்ந்த ஷாகில் (17) வாகனங்களை கழுவும் பணியில் ஈடுபட்டு வந்தார்.
சனிக்கிழமை இரவு தென்கீரனூரைச் சேர்ந்த தண்டபாணி மகன் அரவிந்த் (27) காரை கழுவுவதற்காக கடைக்கு சென்றார். அங்கு பணியை முடித்து விட்டு ஷாகில் மோட்டார் சுவிட்சை நிறுத்த முற்பட்ட போது மின்சாரம் பாய்ந்தது.
மின்சாரம் பாய்ந்த இளைஞரை காப்பாற்ற முயன்ற அரவிந்த் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. உடனே இருவரையும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர் முன்பே உயிரிழந்து விட்டதா தெரிவித்த நிலையில், இருவரின் உடல்களையும் உடற்கூறு ஆய்வு மேற்கொள்வதற்காக வைத்துவிட்டனர்.
இது குறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.