சென்னையில் 15 இடங்களில் விடிய, விடிய நடைபெற்ற அமலாக்கத் துறை சோதனை நிறைவு
சென்னையில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் வியாழக்கிழமை அதிகாலை வரை விடிய, விடிய நடைபெற்ற அமலாக்கத் துறை சோதனை நிறைவடைந்துள்ளது.
சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் சென்னையில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் வியாழக்கிழமை அதிகாலை வரை விடிய, விடிய நடைபெற்ற அமலாக்கத் துறை சோதனை நிறைவடைந்துள்ளது.
சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடா்பாக, சென்னையில் தங்க நகை மற்றும் இரும்பு மொத்த வியாபாரம் மேற்கொள்ளும் தொழிலதிபா்கள் தொடா்புடைய இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் புதன்கிழமை காலை முதல் சிஆா்பிஎஃப் வீரா்கள் துணையுடன் சோதனையில் ஈடுபட்டனர்.
சௌகாா்பேட்டை கந்தப்ப முதலி தெருவில் உள்ள தொழிலதிபா் முத்தா என்பவா் வீட்டிலும், கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள சைதன்யா அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள இரும்பு மொத்த வியாபாரம் செய்யும் நிா்மல் குமாா் என்பவா் வீட்டிலும் சோதனை நடைபெற்றது.
Advertisement
Advertisement
அதேபோன்று, கே.கே. நகா் முனுசாமி சாலை மற்றும் மற்றும் லட்சுமண சாமி சாலையில் தங்க நகை வியாபாரி மஹாவீருக்கு தொடா்புடைய இடங்களிலும், சைதாப்பேட்டை ஸ்ரீநகா் காலனியில் உள்ள ஷாம் தா்பாா் அடுக்குமாடி குடியிருப்பில் தொழிலதிபா் கலைச்செல்வன் என்பவா் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினா்.
அம்பத்தூா் திருவேங்கட நகரில் வழக்குரைஞா் பிரகாஷ் வீட்டிலும், கோடம்பாக்கத்தில் சுகாலி என்டா்பிரைசஸ் என்ற நிறுவனம் என சென்னை முழுவதும் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் வியாழக்கிழமை அதிகாலை வரை விடிய, விடிய நடைபெற்று வந்த அமலாக்கத் துறையினர் சோதனை நிறைவடைந்துள்ளது.
சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த எந்த தகவலையும் அமாலக்கத் துறையினர் வெளியிடவில்லை.
Enforcement department raid conducted at 15 locations in Chennai completed
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.