தற்போதைய செய்திகள்

வினா - விடை வங்கி.... முந்தைய ஆண்டு வினாக்கள்! - 5

முந்தைய ஆண்டு வினாக்கள் வினா - விடை வங்கி...

இணையதளச் செய்திப் பிரிவு

1. நேரு-மகலநோபிஸ் திட்ட மாதிரி பின்வரும் உத்திகளை வலியுறுத்துகிறது.

(i) அதிக சேமிப்பு வீதம்

(ii) கனரக தொழிலுக்கு முன்னுரிமை

(iii) இறக்குமதி பதிலீட்டு ஊக்கமின்மை

(iv) புதிய தொழிலுக்கு பாதுகாப்பு

(A) (i) மற்றும் (ii) சரி

(B) (i), (ii) மற்றும் (iii) சரி

(C) (i), (ii) மற்றும் (iv) சரி

(D) (i), (ii), (iii) மற்றும் (iv)

2. "இந்தியர்களின் ஒத்துழைப்போடு ஆங்கிலேயரின் ஆட்சி நிறுவப்பட்டது, இந்த ஒத்துழைப்பினால் தான் இந்த ஆட்சி பிழைத்துகொண்டிருக்கிறது. இந்தியர்கள் ஒத்துழைக்க மறுத்தால், இந்தியாவில் ஆங்கிலேயரின் ஆட்சி ஒரு வருடத்தில் வீழ்ந்து சுயராஜ்ஜியம் மலரும்" என்று கூறியவர் யார்?

(A) சர்தார் வல்லபாய் பட்டேல்

(B) மோதிலால் நேரு

(C) மகாத்மா காந்திஜி

(D) பால கங்காதர திலகர்

3. 1944-ல் இந்திய அரசாங்கம்_____________ தலைமையின் கீழ் ஒரு திட்டத் துறையை ஏற்படுத்தியது

(A) எஸ்.என். அகர்வால்

(B) எம்.என். ராய்

(C) Dr. ஜான் மாதாய்

(D) சர் அர்தேசிர் தலால்

4. வரிசை I உடன் வரிசை II-னைப் பொருத்தி வரிசைகளுக்குக் கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலுள்ள சரியான விடையினைத் தெரிவு செய்க.

வரிசை I வரிசை II

(a) காங்கிரசு அமைச்சரவை பதவி விலகல் 1.1943

(b) நீல் சிலை சத்யாகிரகம் 2. 1942

(c) வெள்ளையனே வெளியேறு தீர்மானம் 3. 1927

(d) சுதந்திர இந்தியாவின் மாகாண அரசாங்கம் 4.1939

(a) (b) (c) (d)

(A) 4 3 1 2

(B) 2 1 4 3

(C) 4 3 2 1

(D)4 1 2 3

5. 1933-ம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் நிலையத்தில் வெடிகுண்டு வெடித்ததற்காக ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்டவர் யார்?

(A) சத்தியமூர்த்தி

(B) பார்த்தசாரதி

(C) காமராஜ்

(D) அனந்தகிருஷ்ணன்

6. 1923 ஆம் ஆண்டில் மேற்கொண்ட டாக்டர் B.R. அம்பேத்காரின் முனைவர் பட்ட ஆய்வின் தலைப்பு என்ன?

(A) ரூபாயின் பிரச்சினை

(B) சாதி அமைப்பு

(C) இந்தியாவில் தீண்டாமை

(D) இந்தியாவில் ஆங்கிலேயர் இல்லாத ஆட்சி

7. பின்வருவனவற்றில் தவறானவை எவை?

(A) முதல் வட்டமேசை மாநாட்டை இந்திய தேசிய காங்கிரஸ் புறக்கணித்தது

(B) காந்திஜி இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் பங்கேற்றார்

(C) இரண்டாவது வட்ட மேசை மாநாட்டிற்கு பின்பு காந்தி-இர்வின் ஒப்பந்தம் ஏற்பட்டது

(D) கம்யூனல் அவார்டு மூன்றாம் வட்ட மேசை மாநாடோடு தொடர்புடையது

8. 'டாமின்-இ-கோஹ்' என்னும் நிலம் ஆங்கிலேயர்களால் _______க்கு வழங்கப்பட்டது

(A) சந்தால் பழங்குடியினர்

(B) கோல் பழங்குடியினர்

(C) கரோ பழங்குடியினர்

(D) முண்டா பழங்குடியினர்

9. அமில மழை எதனால் உருவாகிறது?

(A) படிம எரிபொருளை எரிப்பதால் வெளிவரும் அதிகப்படியான NO2 மற்றும் SO2 மூலம்

(B) அதிகபடியான (NH3) உற்பத்தி மற்றும் படிம நிலக்கரி வாயு மூலம்

(C) அதிகபடியான கார்பன் மோனாக்சைடு முழுமையாக எரிக்கப்படாமல் இருப்பது

(D) அதிகப்படியான பயன்பாடற்ற கரியமிலவாயு மற்றும் விலங்கின சுவாச முறைகள் மூலம்

10. இமயமலைப் பகுதிகளில் கனிம வளங்கள் ஏன் குறைவாக உள்ளன?

(A) பாறை அடுக்குகளின் இடப்பெயர்ச்சி பாறைகளின் அமைப்பைச் சீர்குலைத்து அதை சிக்கலாக்கியுள்ளது

(B) இது படிகப் பாறையால் ஆனது

(C) நிலப்பரப்பு கனிமங்கள் எடுப்பதை கடினமாக்குகிறது

(D) தட்பவெப்பநிலை கனிமங்கள் எடுப்பதற்கு ஏற்றதல்ல

11. அஸ்தாமுடி என்ற முக்கிய காயல் — கடற்கரையில் காணப்படுகின்றது.

(A) மலபார் கடற்கரை

(B) கொங்காண் கடற்கரை

(C) சோழமண்டல கடற்கரை

(D) வடசர்கார் கடற்கரை

12. சரியான பொருத்தங்களை தேர்வு செய்யவும்

1. கிசார் கான் - ஒரிசா

2. துர்காவதி - கோண்ட்வானா

3. ராணா உதய்சிங் - மேவார்

4. கன்வர் மான் சிங் -அஜ்மீர்

(A) 1 மற்றும் 2 சரியானவை

(B) 2 மற்றும் 3 சரியானவை

(C) 1 மற்றும் 4 சரியானவை

(D) 3 மற்றும் 4 சரியானவை

13. கி.பி. 1894 இல் காசி நகரி பிரச்சாரினி சபா _____ல் நிறுவப்பட்டது

(A) டெல்லி

(B) பம்பாய்

(C) மெட்ராஸ்

(D) கல்கத்தா

14. பிரிட்டிஷ் இந்தியாவில், முதன் முதலில், முஸ்லீம்களுக்கான தனி நாடு கோரிக்கையை முன்வைத்தவர் யார்?

(A) முகம்மது இக்பால்

(B) முகம்மது அலி ஜின்னா

(C) ரஹ்மத் அலி

(D) மவுண்ட் பேட்டன்

15. கூற்று (A) : கூட்டாட்சி என்பது பகிரப்பட்ட ஆட்சி மற்றும் சுய ஆட்சி எனும் கொள்கையின் அடிப்படையில் அரசாங்க நிறுவனங்களின் பல நிலைகளில் அதிகாரப் பரவலைக் கொண்டுள்ளது.

காரணம் [R] : கூட்டாட்சிகள், அரசியல், சமூக மற்றும் பொருளாதார சூழலுக்கேற்ப தம்மை தொடர்ச்சியாக சரி செய்து தகவமைத்துக் கொள்கின்றன.

(A) [A] சரி ஆனால் [R] தவறு

(B) [A] மற்றும் [R] சரி மற்றும் [R] என்பது [A]ன் சரியான விளக்கம்

(C) [A] தவறு ஆனால் (R] சரி

(D) [A] மற்றும் [R] சரி ஆனால் [R] என்பது [A]ன் சரியான விளக்கம் அல்ல

16. கீழ்க் குறிப்பிடப்படுபவற்றில் பௌத்த மதம் குறித்த சரியான கூற்றை தேர்வு செய்க.

1. பௌத்தம் வேதங்களின் ஆதிக்கத்தை மறுக்கிறது

2. பௌத்த போதனைகள் மறுபிறப்பு, மோட்சம், கர்மா ஆகிய பிராமணக் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டது

3. பௌத்தம் நடைமுறை மற்றும் நெறிமுறையற்றது

4. பௌத்தம் கடவுளைப் படைப்பவராக ஏற்றுக் கொள்கிறது

(A) 1, 2 மற்றும் 3 சரி

(B) 1 மற்றும் 2 சரி

(C) 2 மட்டும் சரி

(D) 3 மற்றும் 4 சரி

17. கீழ்க்குறிப்பிடப்படுபவற்றில் குப்தர்கள் காலச் சமுதாயம் குறித்த கூற்றுகளில் சரியானவை எவை?

1. குப்த அரசர்கள் தங்களைப் பரமபாகவதர் என்று அழைத்துக் கொண்டனர்

2. சீனாவுடனும், ரோமுடனும் வியாபாரம் செழித்தது

3. பொது நிகழ்ச்சிகளில் பங்குபெற பெண்களுக்குத் தடை இருந்தது

4. உடன்கட்டை ஏறும் பழக்கம் இருந்தது

(A) 1 மற்றும் 3 சரி

(B) 3 மற்றும் 4 சரி

(C) 4 மட்டும் சரி

(D) 1, 2 மற்றும் 4 சரி

18. முஸ்லீம் சமூகம், அரசியல், நிர்வாகம் மற்றும் மதம் ஆகியவற்றில் உலமாக்கள் ஏன் பெரும் செல்வாக்குச் செலுத்தினார்கள்?

(A) அவர்கள் டெல்லி சுல்தானகத்தில் அதிக எண்ணிக்கையில் இருந்தனர்

(B) அவர்களின் புனித வாழ்க்கை மற்றும் உயர்ந்த சிந்தனை காரணமாக

(C) அவர்கள் முஸ்லீம் இறையியல் மற்றும் ஃபிக் ஆகியவற்றில் நன்கு தேர்ச்சி பெற்றிருந்தனர்

(D) அவர்கள் வர்த்தகம் மற்றும் தொழில்துறையைக் கட்டுப்படுத்தினர்

19. பின்வருவனவற்றில் தவறாக இணைக்கப்பட்டவை எவை?

(1) சுற்றுச்சூழலைப் பாதுகாக்க அரசு மற்றும் தனிநபரின் கடமை - விதி 48A

(2) அனைத்து குழந்தைகளுக்கும் 14 வயது முடியும் வரை குழந்தை பருவ பராமரிப்பு மற்றும் கல்வி - விதி 45

(3) மாநிலத்தின் பொதுச் சேவைகளின் நிர்வாகத்திலிருந்து தனி நிதித்துறை - விதி 39

(4) தன்னார்வ உருவாக்கம், கூட்டுறவு சங்கங்களின் தன்னாட்சி செயல்பாடு - விதி 44

(A) (1), (3) மற்றும் (4) மட்டும்

(B) (2), (3) மற்றும் (4) மட்டும்

(C) (1) மற்றும் (2) மட்டும்

(D) (3) மற்றும் (4) மட்டும்

20. 'லோக் அதாலத்' பற்றிய தவறான வாக்கியத்தை கண்டறியவும்

(A) லோக் அதாலத் என்பது ஒரு வழக்குகளை விரைந்து முடிக்கவல்ல செயலமைப்பு

(B) இது சட்ட அமைப்பின் கருவி அல்ல

(C) வழக்குகளை சமாதான முறையில் முடிவுக்கு கொண்டுவர ஒரு வகையான மன்றம்

(D) லோக் அதாலத் மக்கள் வாசற்படிக்கே சென்று நீதி வழங்குகிறது

21. 'மாநில ஆளுநர் பற்றி கீழ்க்கண்ட வாக்கியங்களில் எது/ எவை தவறானது?

(A) மாநில தலைமை வழக்கறிஞரை நியமிக்கிறார்

(B) மாநிலப் பல்கலை கழகங்களின் வேந்தரை நியமிக்கிறார்

(C) முதலமைச்சரை நியமிக்கிறார்

(D) மாநில தேர்தல் அதிகாரியை நியமிக்கிறார்

22. கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக

பாதுகாத்தல் இயற்றப்பட்ட ஆண்டு

(a) பீடி மற்றும் சிகரெட் தொழிலாளர்கள் 1. 1979

(b) ஒப்பந்தத் தொழிலாளர்கள் 2. 1976

(c) சம ஊதியம் 3. 1970

(d) புலம்பெயர் தொழிலாளர்

வேலைவாய்ப்பு ஒழுங்காற்றுதல் 4. 1966

(a) (b) (c) (d)

(A) 1 2 3 4

(B) 4 3 2 1

(C) 3 2 4 1

(D) 2 3 4 1

23. சுதந்திர இந்தியாவிற்கு ஓர் அரசமைப்புச் சட்டம் வேண்டும் என முதலில் பரிந்துரைத்தவர்

(A) மோதிலால் நேரு

(Β) Μ.Ν. ராய்

(C) சுபாஷ் சந்திர போஷ்

(D) மகாத்மா காந்தி

24. ஒரு நவீன மக்களாட்சி நாட்டில், குடியுரிமை என்பது

(A) இயற்கை உரிமை

(B) சட்ட உரிமை

(C) நாடாளுமன்றச் சட்ட உரிமை

(D) அடிப்படை உரிமை

25. கீழ்க்கண்டவற்றுள் சிந்து மக்களைப் பற்றிய தவறான கூற்று(கள்) எது/எவை?

(i) சிந்துவெளி மக்கள் மரம் மற்றும் விலங்குகளைக் கடவுளாக வழிபட்டனர்

(ii) சிந்துவெளி மக்களின் முக்கியக் கடவுள் கிருஷ்ணர்

(iii) சிந்துவெளி மக்கள் நெருப்பு மற்றும் நீரைக் கடவுளாக வழிபட்டனர்

(iv) சிந்துவெளி மக்களின் முக்கியக் கடவுள் பெண் தெய்வங்கள்

(A) (i) மற்றும் (iii) மட்டும்

(B) (ii) மட்டும்

(C) (i) மற்றும் (ii) மட்டும்

(D) (ii) மற்றும் (iii) மட்டும்

விடைகள்

1. (C) (i), (ii) மற்றும் (iv) சரி

2. (C) மகாத்மா காந்திஜி

3. (D) சர் அர்தேசிர் தலால்

4. (C) 4 3 2 1

5. (C) காமராஜ்

6. (A) ரூபாயின் பிரச்சினை

7. (C) இரண்டாவது வட்ட மேசை மாநாட்டிற்கு பின்பு காந்தி-இர்வின் ஒப்பந்தம் ஏற்பட்டது

8. (A) சந்தால் பழங்குடியினர்

9. (A) படிம எரிபொருளை எரிப்பதால் வெளிவரும் அதிகப்படியான NO2 மற்றும் SO2 மூலம்

10. (A) பாறை அடுக்குகளின் இடப்பெயர்ச்சி பாறைகளின் அமைப்பைச் சீர்குலைத்து அதை சிக்கலாக்கியுள்ளது

11. (A) மலபார் கடற்கரை

12. (B) 2 மற்றும் 3 சரியானவை

13. (C) மெட்ராஸ்

14. (A) முகம்மது இக்பால்

15. (B) [A] மற்றும் [R] சரி மற்றும் [R] என்பது [A]ன் சரியான விளக்கம்

16. (B) 1 மற்றும் 2 சரி

17. (D) 1, 2 மற்றும் 4 சரி

18. (C) அவர்கள் முஸ்லீம் இறையியல் மற்றும் ஃபிக் ஆகியவற்றில் நன்கு தேர்ச்சி பெற்றிருந்தனர்

19. (D) (3) மற்றும் (4) மட்டும்

20. (B) இது சட்ட அமைப்பின் கருவி அல்ல

21. (B) மாநிலப் பல்கலை கழகங்களின் வேந்தரை நியமிக்கிறார்

22. (B) 4 3 2 1

23. (Β) Μ.Ν. ராய்

24. (C) நாடாளுமன்றச் சட்ட உரிமை

25. (B) (ii) மட்டும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புத்தம்புது காலை... ஹெலி ஷா!

புதிய உச்சத்தில் முட்டை விலை!

மம்மூட்டியின் களம்காவல் பட வெளியீடு ஒத்திவைப்பு!

தங்க மீன்... சுனிதா கோகோய்!

பட வரி எழுதுங்கள்... பூமி பெட்னெகர்!

SCROLL FOR NEXT