முகப்பு
தற்போதைய செய்திகள்

ரஷ்மிகாவின் தி கேர்ள்ஃபிரண்ட் ஓடிடி வெளியீட்டுத் தேதி!

தி கேர்ள்ஃபிரண்ட் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி தொடர்பாக...

Updated On : 30 நவம்பர் 2025, 1:34 pm IST
பகிர்:

ரஷ்மிகா மந்தனாவின் தி கேர்ள்ஃபிரண்ட் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்மிகா மந்தனா பிரதான பாத்திரத்தில் நடித்துள்ள தி கேர்ள்ஃபிரண்ட் படம், கடந்த நவ. 7 ஆம் தேதி வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

பாடகி சின்மயியின் கணவரும் நடிகருமான ராகுல் ரவீந்திரன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

Advertisement

Advertisement

கீதா ஆர்ட்ஸ் மற்றும் தீரஜ் மோகிலினேனி என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்துக்கு, ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.

மேலும், இந்தப் படத்தில் தீக்‌ஷித் ஷெட்டி, ராவ் ரமேஷ், அனு இமானுவேல், ராகுல் ரவீந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், தி கேர்ள்ஃபிரண்ட் படத்தின் திரைப்படம் வரும் டிச. 5 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் வெளியாகிறது.

summary

The Girlfriend OTT release date

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.