கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் கோயில்களில் நடைபெற்ற நவராத்திரி நிறைவு விழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபாடு செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நவராத்திரி திருவிழா செப்டம்பர் 23 ஆம் தேதி தொடங்கியது. நவராத்திரி விழாவையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
கோயில்களிலும் வீடுகளிலும் நவராத்திரி கொலு அமைக்கப்பட்டு, நாள்தோறும் முப்பெரும் தேவியருக்கு சிறப்பு பூஜைகள் செய்து மக்கள் உற்சாகமாக கொண்டாடினர்.
9 நாட்கள் நடைபெறும் இந்த நவராத்திரி விழா நிறைவு பெற்றதையொட்டி கிருஷ்ணகிரியில் உள்ள 14 கோயில்களின் உற்சவம் மூர்த்திகள் அலங்கரிக்கப்பட்ட தேர்களில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
நவராத்திரி நிறைவு
நவராத்திரி நிறைவு நாளான வியாழக்கிழமை இரவு (அக்.2) பழைய பேட்டை பகுதியில் உள்ள லட்சுமி நாராயண சுவாமி கோயில், சீனிவாச பெருமாள் கோயில், தஞ்சாவூர் மாரியம்மன் கோயில், கவீஸ்வரர்கோயில், ராமர் கோயில், காட்டிநாயக்கனப்பள்ளி முருகன் கோயில், புதுப்பேட்டை கிருஷ்ணன் கோயில், சோமேஸ்வரர் கோயில் என 14 கோயில்களிலிருந்து உற்சவ மூர்த்திகளின் சிறப்பு அலங்கார தேர்பவனி முக்கிய வீதிகள் வழியாக சென்று பக்தர்களுக்கு அருள்பாளித்தனர்.
இரவு முழுவதும் பல்வேறு வீதிகள் வழியாகச் சென்ற இந்த தேர்கள், கிருஷ்ணகிரி பழையபேட்டை, காந்தி சிலை அருகே ஒன்றுகூடி அணிவகுத்து நின்றன.
பின்னர் தேர்களுக்கு முன்பு வன்னி மரம் வெட்டும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து பக்தர்கள் வழிபட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமல்லாமல் ஆந்திரம், கர்நாடகம் மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வன்னி மரத்தின் இலைகளை சேகரித்து வீடு, கடைகளில் வைத்தால் நல்லது நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. நூற்றாண்டுகளாக நடைபெறும் இந்த நிகழ்வில், கிருஷ்ணகிரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.