தெற்கு பிலிப்பின்ஸிலிருந்து கடலோரப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு பிலிப்பைன்ஸ் மாகாணத்தில் வெள்ளிக்கிழமை காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.3 ஆகப் பதிவாகியுள்ளதாக பிலிப்பின்ஸ் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த நிலநடுக்கத்தால் சுனாமி பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
டவாவோ ஓரியண்டல் மாகாணத்தில் உள்ள மனாய் நகரத்திலிருந்து தென்கிழக்கே கடற்கைரையில் இருந்து சுமார் 62 கிலோமீட்டர் தொலைவில், 10 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கத்தால் சேதம் மற்றும் பின்னதிர்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நிலநடுக்கவியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹொனலுலுவில் உள்ள பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம், நிலநடுக்கம் ஏற்பட்ட மையப்பகுதியிலிருந்து 300 கிலோமீட்டருக்குள் ஆபத்தான அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் சுனாமி போன்ற ஆபத்து இல்லை என்று தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர், பொருள் சேதங்கள் மற்றும் பாதிப்பு குறித்த எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.