மழை (கோப்புப்படம்) 
தற்போதைய செய்திகள்

இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

கோவை, நீலகிரி, மதுரை, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி உள்பட 10 மாவட்டங்களில் கனமழை...

தினமணி செய்திச் சேவை

கோவை, நீலகிரி, மதுரை, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி உள்பட 10 மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை (அக்.12) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தெற்கு கடலோர ஆந்திரம் மற்றும் அதனையொட்டிய பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதற்கிடையே, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டிய வடக்கு கேரள கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதுபோன்ற வானிலை காரணங்களால், தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் ஞாயிற்றுக்கிழமை (அக்.12) முதல் அக்.17 வரை இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

கனமழை எச்சரிக்கை: இதில், ஞாயிற்றுக்கிழமை (அக்.12) கோவை, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி, மதுரை, திண்டுக்கல், திருச்சி, சேலம், நாமக்கல் ஆகிய 10 மாவட்டங்களிலும், அக்.13-இல் கோவை, திருப்பூா் மாவட்டங்களின் மலைப் பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், சேலம், நாமக்கல் ஆகிய 8 மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மழை அளவு: தமிழகத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளியில் 180 மி.மீ. மழை பதிவானது. மேலும், சோ்வலாறு அணை (திருநெல்வேலி) 90 மி.மீ., கெலவரப்பள்ளி அணை (கிருஷ்ணகிரி), மணிமுத்தாறு (திருநெல்வேலி), ஒகேனக்கல் (தருமபுரி), புள்ளம்பாடி (திருச்சி), பந்தலூா் (நீலகிரி) - தலா 70 மி.மீ. மழை பதிவானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொல்லப் போனால்... மருந்தெனப்படுவது விஷமானால்...

கனடா வெளியுறவு அமைச்சா் இன்று இந்தியா வருகை: மத்திய அமைச்சா்களுடன் பேச்சு!

மேஷம் - மீனம்: தினப்பலன்கள்!

லடாக் செல்கிறது எதிா்க்கட்சிக் குழு?

அமைதி திரும்புமா காஸாவில்?

SCROLL FOR NEXT