"A Sun from the south"(தெற்கிலிருந்து ஒரு சூரியன்) நூலினை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின். 
தற்போதைய செய்திகள்

தெற்கிலிருந்து ஒரு சூரியன் நூலினை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்!

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் "A Sun from the south"(தெற்கிலிருந்து ஒரு சூரியன்) நூலினை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை: தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் "A Sun from the south"(தெற்கிலிருந்து ஒரு சூரியன்) நூலினை வெள்ளிக்கிழமை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (அக். 24) தலைமைச் செயலகத்தில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் “A Sun from the south” என்னும் நூலினை வெளியிட்டார்.

இந்நூலினை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் தனது ‘திசைதோறும் திராவிடம்’ திட்டத்தின்கீழ், கே.எஸ்.எல். மீடியா-வுடன் இணைந்து கூட்டு வெளியீடாக வெளியிடுகிறது.

“A Sun from the South” என்னும் இந்நூல் முத்தமிழறிஞர் கலைஞர் ஆளுமையை திராவிட இயக்கத்தோடு இணைத்துக் காணும் அதே வேளையில் இந்தியாவின் சமகால வரலாற்றை, அரசியலை தெற்கிலிருந்து ஆராய ஊக்கமும் உற்சாகமும் தரும் விதமாக தொகுக்கப்பட்டுள்ளது.

“தெற்கிலிருந்து ஒரு சூரியன்” என்னும் பெயரில் முன்னர் வெளிவந்த தமிழ் நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான இது, மூலநூலைப் படிக்கும் அதே விறுவிறுப்போடு வாசகர்களைக் கவரும் விதமாகக் கூடுதல் கவனம் செலுத்தி எழுதப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மரு.பி. சந்தரமோகன், தமிழ்நாடு பாடநூல் மற்றும்

கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் (பொறுப்பு) மரு. மா. ஆர்த்தி மற்றும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக உதவி இயக்குநர் முனைவர் ப. சரவணன் மற்றும் இந்து தமிழ்த்திசை துணை ஆசிரியர் எ.வள்ளியப்பன், புத்தக மொழிபெயர்ப்பாளர் விஜயசங்கர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

A Sun from the south Book CM Release

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 10 காசுகள் உயர்ந்து ரூ.87.78 ஆக நிறைவு!

பைசனை பாராட்டிய வைகோ!

ஸ்மிருதி மந்தனா - பிரதீகா ராவல் பார்ட்னர்ஷிப்பின் ரகசியம் இதுதான்!

தண்ணீர் அதிகமாகக் குடிப்பது ஆபத்தா?

பாலகிருஷ்ணாவின் அகண்டா - 2 கிளிம்ஸ் விடியோ!

SCROLL FOR NEXT