புதுச்சேரி: புயல் எச்சரிக்கை காரணமாக புதுச்சேரியின் யேனம் பிராந்தியத்தில் நாளை திங்கள்கிழமை (அக். 27) முதல் 3 நாள்களுக்குப் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மோந்தா புயல் செவ்வாய்க்கிழமை இரவு(அக்.28) ஆந்திரம் மாநிலம் காக்கிநாடா அருகே கரையைக் கடக்கும் என்றும் இதனால் யேனம் பிராந்தியத்தில் பலத்த காற்றுடன் கடும் மழை பெய்யும் என எதிா்பாா்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து ஆந்திரம் அருகே உள்ள புதுச்சேரி மாநிலத்தின் யேனத்தில் 3 நாள்களுக்குப் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து யேனம் மண்டல நிா்வாகி அங்கீத் குமாா் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
புயல் தாக்கம் காரணமாக யேனமில் புதன்கிழமை(அக்.29) தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மாவட்ட நிா்வாகம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இதுதொடர்பாக அனைத்து துறைகளுக்கும் அறிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது. நிவாரண பணிகளில் ஈடுபட 24 மணி நேரமும் ஊழியா்கள் பணியில் இருக்குமாறும், அனைத்து அரசு பள்ளிகளும் நிவாரண மையங்களாக செயல்படுவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புயலைக் கருத்தில் கொண்டு யேனமில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு திங்கள் முதல் புதன்கிழமை வரை(அக்.27- 29) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மீனவா்கள் கடலில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா படகு இல்லம் மூடப்பட்டுள்ளது. வெள்ள நீரை வெளியேற்ற பம்பு செட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பொதுமக்கள் ஒரு வாரத்திற்குத் தேவையான மருந்துகள் மற்றும் மளிகை பொருட்களைச் சேமித்து வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.