மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 30,000 கன அடியாக குறைக்கப்பட்டது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 30,500 கன அடியாக சரிந்த நிலையில், மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் திறக்கப்படும் உபரிநீரின் அளவு வினாடிக்கு ஞாயிற்றுக்கிழமை 30,000 கன அடியாக குறைக்கப்பட்டது.
மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாகவும் நீர் இருப்பு 93.47 டிஎம்சி யாகவும் உள்ளது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 30,500 கன அடியாக சரிந்தது. அணையில் இருந்து நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 22,300 கன அடி நீரும், உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு 7,700 கன அடி நீரும், மேல்மட்ட மதங்கள் வழியாக கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.