லண்டனில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின். 
தற்போதைய செய்திகள்

திருவள்ளுவர் சிலைக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

முதல்வர் மு.க.ஸ்டாலின் லண்டனில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈா்க்கும் வகையில் பிரிட்டனுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் லண்டனில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

இதுதொடர்பாக முதல்வர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

லண்டன் கீழைத்தேயவியல் மற்றும் ஆப்பிரிக்கவியல் பல்கலைக்கழக இந்திய வம்சாவளி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகளுடன் நமது திராவிட மாடல் ஆட்சி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் இளைஞர்களின் ஆற்றல் ஆகியவை குறித்த எனது கருத்துகளைப் பகிர்ந்து, மனதுக்கு நெருக்கமான உரையாடலை மேற்கொண்டேன்.

பின்னர், அங்கிருந்த திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்தி, எக்காலத்துக்குமான தமிழ்ப் பண்பாட்டின் அறிவுக்கருவூலமாகத் திகழும் திருக்குறளைப் போற்றினேன்.

இறுதியாக, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75 ஆண்டுகளையொட்டி, அதன் மக்களாட்சி மரபினையும் தற்காலப் பொருத்தப்பாடினையும் குறித்து நடைபெறும் PACT கண்காட்சியைப் பார்வையிட்டேன் என கூறியுள்ளார்.

I then paid homage at the Thiruvalluvar statue; restored plaque, honouring Tamil culture’s timeless wisdom through the immortal words of the Thirukkural.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவில்பட்டியில் சா்வதேச கழுகுகள் தின விழா

கல்வியாளா்களுக்கு ஏஐ தொழில்நுட்பப் பயிற்சி: சென்னை ஐஐடி தொடங்குகிறது

தினமும் 1,000 பேருக்கு காலை உணவு: அன்னம் தரும் அமுதக் கரங்கள் திட்டத்தின் 200-ஆவது நாள்

பாரமல்ல, ஆதாரம்!

மூன்றாவது கண்!

SCROLL FOR NEXT