கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

11 மாவட்டங்களில் மாலை 6 மணி வரை மழைக்கு வாய்ப்பு!

சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மாலை 6 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மாலை 6 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்னிந்திய கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் பல இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை (செப்.7) முதல் செப்.12-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

இதில், ஞாயிற்றுக்கிழமை (செப்.7) திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூா், மயிலாடுதுறை, திருச்சி, அரியலூா், பெரம்பலூா் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மாலை 6 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில்,

கோவை, திண்டுக்கல், மதுரை, தேனி, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், பெரம்பலூர், சேலம் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மாலை 6 மணி மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

The Chennai Meteorological Department has said that there is a possibility of moderate rain in 11 districts including Chennai until 6 pm.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெடிகுண்டு மிரட்டல்: கேரள முதல்வர் இல்லம், நீதிமன்ற வளாகத்தில் சோதனை

ஜெரூசலேமில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு! 5 பேர் பலி!

பாஜகவிலிருந்து விலகிய புதுச்சேரி முன்னாள் தலைவர்!

ஜிஎஸ்டி குறைப்பு: ராயல் என்ஃபீல்டு பைக்குகள் விலையில் மாற்றம்!

ஓடிடியில் கவனம் பெறும் பன் பட்டர் ஜாம்!

SCROLL FOR NEXT