ஆந்திர முதல்வர் என். சந்திரபாபு நாயுடு Center-Center-Vijayawada
தற்போதைய செய்திகள்

அறுவைச் சிகிச்சை குழந்தைப் பேறுக்கு பேராசை பிடித்த மருத்துவர்களே காரணம்: சந்திரபாபு நாயுடு

நாட்​டிலேயே அறுவைச் சிகிச்சை முறை​யில் குழந்தை பெற்​றுக் கொள்​வ​தில் ஆந்​திரம் முதலிடம் வகிப்பதற்கு "பேராசை பிடித்த மருத்துவர்களே" காரணம்...

இணையதளச் செய்திப் பிரிவு

அமராவதி: நாட்​டிலேயே அறுவைச் சிகிச்சை முறை​யில் குழந்தை பெற்​றுக் கொள்​வ​தில் ஆந்​திரம் முதலிடம் வகிப்பதற்கு "பேராசை பிடித்த மருத்துவர்களே" காரணம் என குற்றம்சாட்டிய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தை பெற்​றுக்​கொள்​வது மிக​வும் ஆபத்​தானது என தெரிவித்தார்.

ஆந்​திரம் மாநிலம் அமராவதியில் சட்​டப்​பேர​வை​யின் மழைக்​கால கூட்​டத்​தொடர் நடை​பெற்று வரு​கிறது. குழந்​தைப் பேறு குறித்து புதன்கிழமை நடை​பெற்ற விவாதத்​தில், முதலமைச்சர் சந்​திர​பாபு நாயுடு பேசுகையில், நாட்​டிலேயே அறுவைச் சிகிச்சை முறை​யில் குழந்தை பெற்​றுக் கொள்​வ​தில் ஆந்​திரம் முதலிடம் வகிக்​கிறது என புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.

இதற்கு "பேராசை பிடித்த மருத்துவர்களே" காரணம் என குற்றம்சாட்டிய முதல்வர் நாயுடு, தனியார் சுகாதார வசதிகளை கடுமையாக விமரிசனம் செய்ததுடன் அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தை பெற்​றுக்​கொள்​வது மிக​வும் "ஆபத்தானது" மற்றும் தேவையற்ற நடைமுறை என்றார்.

மாநிலத்தில் நடைபெறும் குழந்​தை பேறுகளில் 90 சதவீதம் அறுவைச் சிகிச்சை மூலம் நடைபெறுவதாகவும், இதில் தனியார் மருத்துவமனைகள் பெரும் பங்கு வகிப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

மேலும், மருத்துவத் தேவையை விட வசதி அல்லது குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட முகூர்த்த நேரத்​தில் குழந்தையை பெற்றுக் கொள்ள பலர் விருப்பம் தெரிவிப்பதால் மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை நேரத்தை நிர்​ண​யிக்​கிறார்​கள். குடும்பத்தினருக்கு சாதக​மாக அல்​லது மூட நம்​பிக்கை காரண​மாக அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தை பெற்​றெடுக்​கும் சம்​பவங்​கள் அதிகயளவில் நடை​பெறுகின்​றன. இது மிக​வும் தவறாகும். அதே நேரத்தில், மருத்​துவ ரீதி​யான தேவை ஏற்​பட்​டால் மட்​டுமே அறுவை சிகிச்சை செய்ய வேண்​டுமே தவிர, தேவையில்லாமல் மனித உடலை அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்படக்கூடாது என்று வலியுறுத்தினார்.

குறிப்பாக இயற்கையாக குழந்தேப் பேறு நடப்பதற்கான அதிகயளவிலான சாத்தியங்கள் இருக்கும்போது அறுவை சிகிச்சை எதற்கு என்றவர், மாநிலத்தின் சுகாதாரத் திட்டமான டாக்டர் என்டிஆர் வைத்திய சேவா அறக்கட்டளையின் கணிசமான நிதி குழந்தைப் பேறு அறுவைச் சிகிச்சைகளுக்கு செலவிடப்படுவதாகவும், இதனால் பொது நிதி வீணாகிறது என தெரிவித்தார்.

இந்த பிரச்னையை சுகாதார அமைச்சர் ஒய். சத்ய குமார் யாதவ் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு தீர்வு காண வேண்டும் முதலமைச்சர் நாயுடு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், மருத்துவ ரீதியாக தேவை ஏற்பட்டால் மட்டுமே அறுவைச் சிகிச்சை செய்யப்படுவதை உறுதிசெய்யவும், இயற்கையான குழந்தைப் பேறுகளுக்கு தனியார் மருத்துவமனைகள் முன்னுரிமை அளிக்க வேண்டும் என நாயுடு வலியுறுத்தினார்.

Highest C-Sections In Andhra? Chandrababu Naidu Slams "Greedy Doctors" The Chief Minister's remarks come as new data reveals Andhra Pradesh has one of the highest C-section rates in the country

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் அட்டகாசமான படங்கள்!

பிரான்ஸ் முன்னாள் அதிபர் சர்கோஸிக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை!

5-ம் நாளாக சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ரூ. 3 லட்சம் கோடி இழப்பு!!

சர்தார் ஜி - 3! பாக். நடிகையுடனான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த தில்ஜித்!

ரிஷப் பந்த் மீண்டும் இந்திய அணியுடன் இணைவது எப்போது? அஜித் அகர்கர் பதில்!

SCROLL FOR NEXT