ஜெர்மனியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் உலகின் முன்னணி ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனம் போஷ், தனது பணியாளர்களில் 13,000 பேரை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
கரோனா தொற்றுக்குப் பிறகு, அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற தோ்தலில் வெற்றி பெற்று, நாட்டின் அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த மாதம் பொறுப்பேற்றதில் இருந்தே உரிய ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் தங்கியிருப்பவா்களுக்கு பிறப்பின் அடிப்படையில் அளிக்கப்படும் குடியுரிமையை ரத்து செய்வது, சட்டவிரோத குடியேற்றவாசிகளை நாட்டைவிட்டு வெளியேற்றுவது மற்றும் அண்டை நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது கூடுதல் வரி விதிப்பு போன்ற அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறாா்.
இதனிடையே உலகளாவிய வர்த்தக சந்தைகளில் ஏற்பட்டுள்ள மந்தமான சூழலால் ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுகட்டும் நடவடிக்கையாக முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களான டெஸ்லா, பிஒய்டி போன்ற நிறுவனங்கள் ஆள்குறை நடவடிகைகளில் ஈடுபட்டது.
இந்நிலையில், ஜெர்மனியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் உலகின் முன்னணி வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி நிறுவனமான போஷ், தனது பணியாளர்களில், 13,000 பேரை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்டை நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது கூடுதல் வரி விதிப்புகளால் ஏற்பட்டுள்ள செலவு அதிகரிப்பு, இதனால் வாகன உற்பத்தி குறைவு, வாகன சந்தையில் ஏற்பட்டுள்ள மந்தமான சூழல் போன்ற காரணங்களால் உலகம் முழுவதும் உள்ள நிறுவனத்தின் கிளைகளில் இருந்து சுமார் 13,000 பணியாளர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
வாகன சந்தையில் தேவைகள் குறைவு, டிரம்பின் கூடுதல் வரி விதிப்புகளால் ஏற்படும் அதிக செலவுகளை ஈடுகட்டுவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. "இந்த முடிவு எங்களுக்கு மிகவும் வேதனையானது, ஆனால் துரதிர்ஷ்டவசமாக வேறு வழி இல்லை." என்று கூறியுள்ளது.
உலகளவில் போஷ் நிறுவனத்தில் சுமார் 4,18,000 பணியாளர் பணி செய்து வருகின்றனர்.
கரோனாவிற்கு பிறகு அமேசான், ட்விட்டர், ஸ்விக்கி போன்ற நிறுவனங்கள் பணிநீக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டது. பின்னர் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களான டெஸ்லா, பிஒய்டி போன்ற நிறுவனங்கள் ஆள்குறை நடவடிகைகளில் ஈடுபட்டது. இந்த வரிசையில் தற்போது போஷ் இணைந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.