முகப்பு
தற்போதைய செய்திகள்

கோவையில் 11 தொகுதிகளிலும் அதிமுக வெற்றியைத் தடுக்க முடியாது: எஸ்.பி. வேலுமணி

கோவையில் 11 தொகுதிகளிலும் அதிமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது என முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசியது...

Updated On : 1 ஏப்ரல், 2026 at 4:16 AM
கோவை சூலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் வி.பி. கந்தசாமியை அறிமுகம் செய்துவைக்கும் கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி. - டிஎன்எஸ்
பகிர்:

கோவை: கோவையில் 11 தொகுதிகளிலும் அதிமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது. "அதே தொகுதி, அதே வெற்றி, அதே ரிப்பீட்" என அதிமுகவின் வெற்றி தொடரும் என்றும்

விஜய் கணக்கிலே இல்லை என முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசினார்.

கோவை மாவட்டம் சூலூர் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் வி.பி. கந்தசாமியை அறிமுகப்படுத்தும் கூட்டத்தில் பங்கேற்று பேசிய எஸ்.பி. வேலுமணி, வேட்பாளரை அறிமுகம் செய்து வைத்து உரையாற்றினார்.

அப்போது, தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைவது உறுதி. சூலூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பல கட்சிகளுக்குத் தாவிவிட்டு தற்போது வந்துள்ளவர் என்றும் ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தைக் கொண்டு வந்தவர் எடப்பாடி பழனிசாமி என்பதைச் சுட்டிக்காட்டியவர், எத்தனை திமுகவினரை கோவைக்குக் கொண்டு வந்தாலும் 11 தொகுதிகளிலும் அதிமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது. "அதே தொகுதி, அதே வெற்றி, அதே ரிப்பீட்" என அதிமுகவின் வெற்றி தொடரும் என்றும், கொலுசு போன்ற பொருட்களைக் கொடுத்து மக்களை ஏமாற்றும் திமுகவின் நாடகத்தை இந்த முறை மக்கள் முறியடிப்பார்கள்.

மேலும், தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் கணக்கிலேயே இல்லை என்றும், மற்ற கட்சிகளுக்குப் பிரியும் வாக்குகள் திமுகவிற்கே சாதகமாக முடியும்.

பிரதமர் நரேந்திர மோடி மதுரை வந்தபோது குறிப்பிட்டது போல தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் புழக்கத்தால் இளைஞா்கள் அவற்றுக்கு அடிமையாகி வருகின்றனா். சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக குற்றம் சாட்டினார். இளைஞா்கள் அவற்றுக்கு அடிமையாகி வருகின்றனா். இவற்றை கட்டுப்படுத்த காவல் துறையினா் வேலை செய்வதே இல்லை. மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால்தான் மக்களுக்கு பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு பாதுகாக்கப்படும். அதிமுக ஆட்சியில் ரூ.63 ஆயிரம் கோடியில் மெட்ரோ திட்டம், 11 மருத்துவக் கல்லூரிகள், அனைவருக்கும் வீடு உள்ளிட்ட திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. எனவே, பாஜக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினரை அரவணைத்துச் செல்ல வேண்டும். இன்னும் 20 நாள்கள் அதிமுக தொண்டா்கள் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்து கடுமையாக தோ்தல் பணியாற்ற வேண்டும் என்றாா்.

இந்த அறிமுகக் கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.

summary

Former Minister S.P. Velumani stated that the AIADMK's victory in all 11 constituencies in Coimbatore cannot be prevented

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.