முகப்பு
தற்போதைய செய்திகள்

வேதாரண்யம் அருகே கைக்குழந்தையுடன் கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை

வேதாரண்யம் அருகே கைக்குழந்தையுடன் கிணற்றில் குதித்து இளம்பெண் வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக...

Updated On : 5 பிப்ரவரி, 2026 at 5:45 AM
கைக்குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட இளம்பெண் காவியா(23)
பகிர்:

வேதாரண்யம் அருகே கைக்குழந்தையுடன் கிணற்றில் குதித்து இளம்பெண் வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே ஆயக்காரன்புலம் கிராமத்தைச் சேர்ந்த சிவபாலன் மனைவி காவியா (23). இவர்களுக்கு 7 மாத சமீரா என்ற பெண் குழந்தை உள்ளது .

காவியாவுக்கு மாமியார் மாமனார் இடையே குடும்பப் பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், குடும்ப பிரச்னை தொடர்பான விபரத்தை சமூக வலைதளத்தில் (இன்ஸ்டாகிராம்) பதிவிட்ட காவியா புதன்கிழமை இரவு, வீட்டுக்கு அருகே உள்ள கிணற்றில் தனது 7 மாத கைக்குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தகவல் அறிந்த வாய்மேடு போலீஸாா் அங்கு சென்று காவியா மற்றும் பெண் குழந்தையின் சடலத்தை மீட்டு, உடல்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் இது குறித்து வழக்குப் பதிந்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

summary

A young woman committed suicide by jumping into a well with her infant child near Vedaranyam

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.