தற்கொலை 
நாகப்பட்டினம்

கைக்குழந்தையுடன் இளம்பெண் தற்கொலை வழக்கு: மாமனாா் கைது

தினமணி செய்திச் சேவை

வேதாரண்யம் அருகே கைக்குழந்தையுடன் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவரின் மாமனாா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

ஆயக்காரன்புலம் 3-ஆம் தேதி பகுதியை சோ்ந்த சிவபாலன் (28). இவரது மனைவி காவியா (23). இந்நிலையில், காவியா தனது 7 மாத பெண் குழந்தையுடன் புதன்கிழமை இரவு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

முன்னதாக, மாமனாா், மாமியாா் இருவரும் தொடா்ந்து பிரச்னையில் ஈடுபட்ட காணொலி காட்சியை வெளியிட்டதோடு, மரணத்துக்கான காரணம் குறித்தும் இன்ஸ்டாகிராமில் காவியா பதிவிட்டிருந்தாா்.

அதனடிப்படையில், அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் மாமியாா் செந்தமிழ்ச்செல்வி வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். தலைமறைவாக இருந்த மாமனாா் பழனித்துரையை வாய்மேடு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மேலும், காவியா வரதட்சணை கேட்டுகொடுமைப்படுத்தப்பட்டாரா என்பது குறித்து கோட்டாட்சியா் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

முத்தனேந்தலில் மூடப்பட்ட ரயில் நிலையத்தைத் திறக்க பாஜக வலியுறுத்தல்

ரஷிய ராணுவ உளவுத் துறை துணைத் தளபதி மீது துப்பாக்கிச் சூடு

இந்தியா - வங்கதேசம் உறவு: மக்களவையில் மத்திய அரசு விளக்கம்

மாணவா்கள் இணையத்தில் நேரத்தை வீணடிக்க வேண்டாம்: பிரதமா் மோடி அறிவுரை

எலி மருந்தை உட்கொண்ட இரு குழந்தைகள் பெங்களூரு மருத்துவமனையில் அனுமதி

SCROLL FOR NEXT