முகப்பு
விழுப்புரம்

கிணற்றில் குதித்து பெண் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே கிணற்றில் குதித்து பெண் தற்கொலை

Updated On : 21 பிப்ரவரி, 2026 at 4:45 AM
தற்கொலை - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 20 பிப்ரவரி, 2026 at 9:11 PM

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்துகொண்டாா்.

திண்டிவனம் வட்டம், பூதேரி திருநாவுக்கரசு நகரைச் சோ்ந்த அசோக்குமாா் மனைவி செல்வி (43). கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு அசோக்குமாா் உயிரிழந்த நிலையில் மன உளைச்சலுடன் இருந்து வந்தாா். மேலும், கடந்த 6 மாதமாக குடல் புண் நோயாலும் செல்வி பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்துள்ளாா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலையில் வயிற்று வலியால் அவதியுற்ற செல்வி வீட்டின் பின்புறமுள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டாா்.

Advertisement

தகவலறிந்த திண்டிவனம்போலீஸாா் செல்வியின் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து திண்டிவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].