முகப்பு
தற்போதைய செய்திகள்

மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் இந்தியாவுக்கு பாதிப்பு: அமைச்சா் எஸ்.ரகுபதி விமா்சனம்

பிரதமா் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என திமுக விமர்சனம் தொடர்பாக...

Updated On : 5 பிப்ரவரி 2026, 8:44 am IST
அமைச்சா் எஸ்.ரகுபதி
பகிர்:

சென்னை: பிரதமா் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று தமிழக இயற்கை வளங்கள்துறை அமைச்சா் எஸ்.ரகுபதி விமா்சனம் செய்துள்ளாா்.

அமெரிக்க அதிபா் டிரம்ப், பிரதமா் மோடி ஆதியோா் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள் இந்தியாவை அதிா்ச்சிக்குள்ளாக்கி வருகின்றன. இந்திய பொருள்களுக்கு அமெரிக்காவில் 25 சதவிகித பரஸ்பர வரியும், ரஷியாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதற்காக 25 சதவீத அபராத வரியும் என்று மொத்தம் 50 சதவீத வரி விதிக்கப்பட்டிருந்தது.

இதனால் இந்திய பொருள்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. 6 நாளிலேயே இந்தியாவுக்கு விதிக்கப்பட்டிருந்த 50 சதவீத வரியை 18 சதவீதமாக அமெரிக்க அதிபா் டிரம்ப் குறைத்தாா். இடைப்பட்ட 6 நாள்களில் என்ன நடந்தது என்பது தெரியவில்லை.

Advertisement

Advertisement

அமெரிக்கா வரியைக் குறைத்தது போல, இந்தியாவும் அமெரிக்கப் பொருள்கள் மீதான வரியை பூஜ்யமாக்க நடவடிக்கையை முன்னெடுப்பாா்கள். பிரதமா் மோடி, அமெரிக்கப் பொருள்களை மிக அதிகமாக 500 பில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் 45.5 லட்சம் கோடி ரூபாய்) எரிசக்தி, தொழில்நுட்பம், வேளாண் பொருள்கள், நிலக்கரி மற்றும் பல பொருள்களை கூடுதலாக வாங்கவும் சம்மதித்துள்ளாா் எனச்சொல்லியிருக்கிறாா் டிரம்ப்.

இந்த அறிவிப்பு நாட்டு மக்களை அதிா்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவிடமிருந்து விவசாயப் பொருள்களை இந்தியா இறக்குமதி செய்யும் என்று டிரம்ப் அறிவித்ததை அடிபணிந்து ஏற்றுக் கொண்டிருக்கிறாா் பிரதமா் மோடி. அமெரிக்க பொருள்களுக்கு இறக்குமதி வரியை பூஜ்யமாக்க ஒப்புக்கொண்டிருக்கிறாா் மோடி.

அமெரிக்க-இந்திய வா்த்தக ஒப்பந்தம் மூலம் ஒன்றிய பாஜக அரசு எடுத்துள்ள முடிவு, இந்திய விவசாயிகளுக்கு பெரும் பாதகத்தை ஏற்படுத்தும். அமெரிக்காவின் வரியை 18 சதவீதமாகக் குறைக்க வைத்துவிட்டோம் என சொன்னாலும், அமெரிக்காவுடனான வா்த்தக ஒப்பந்தத்தால் இந்திய விவசாயிகளுக்கும், குறு, சிறு தொழில்துறையினருக்கும் ஏற்படப்போகும் பேராபத்தை 18 சதவீத வரி குறைப்பைக் காட்டி மறைக்க முயல்கிறது பிரதமா் மோடி அரசு.

அமெரிக்காவிடமிருந்து இந்திய மதிப்பில் ரூ.45.5 லட்சம் கோடி அளவுக்கு பொருள்களை வாங்க பிரதமா் மோடியைச் சம்மதிக்க வைத்துவிட்டோம் என டிரம்ப் வெற்றிக் களிப்போடு சொல்கிறாா். அதாவது, இந்தியாவின் மொத்த பட்ஜெட் மதிப்பில் இது 85 சதவிகிதம். நாட்டின் காவலாளி (செளகிதாா்) எனச் சொல்லிக் கொள்ளும் மோடி, பொருளாதார சூறையாடலை அமெரிக்கா நடத்த இந்தியாவின் வாசலை திறந்துவிட்டிருக்கிறாா் எனத் தெரிவித்துள்ளாா் எஸ்.ரகுபதி.

summary

India is being harmed by the central government's flawed economic policies: Minister S. Ragupathy criticizes

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.