பிரதமர் நரேந்திர மோடியுடன் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை சந்திப்பு.  
தற்போதைய செய்திகள்

பிரதமர் நரேந்திர மோடியுடன் சுந்தர் பிச்சை சந்திப்பு!

கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையும் பிரதமர் நரேந்திர மோடியும் சந்திப்பு குறித்து....

இணையதளச் செய்திப் பிரிவு

புது தில்லி: இந்தியாவின் உருமாற்றத் திறன் மற்றும் செயற்கை நுண்ணறிவு தாக்கம் உச்சி மாநாடு 2026-இல் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை புதன்கிழமை தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். மேலும் பிப்ரவரி 20 ஆம் தேதி உச்சிமாநாட்டில் அவர் முக்கிய உரையை நிகழ்த்த உள்ளார்.

முன்னதாக, எக்ஸ் வலைதள பக்கத்தில் சுந்தர் பிச்சை பதிவிட்டிருப்பதாவது: "இந்தியாவின் உருமாற்றத் திறன் மற்றும் சர்வதேச செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாட்டிற்காக இந்தியாவுக்கு மீண்டும் வந்ததில் மகிழ்ச்சி - எப்போதும் போல மிகவும் அன்பான வரவேற்பு மற்றும் ஆவணங்களும் சிறப்பாக இருந்தன" என்று பதிவிட்டுள்ளார்.

இந்தியாவின் ஏற்பாட்டில் தில்லியில் பாரத் மண்டபத்தில் பிப்.16-ஆம் தேதி தொடங்கிய சா்வதேச செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தாக்க உச்சிமாநாடு பிப்ரவரி 20 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முதல்முறையாக தெற்குலகில் நடைபெறும் இந்த உச்சிமாநாட்டை பிரதமா் நரேந்திர மோடி கடந்த திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். இந்த மாநாட்டுக்கு உலகெங்கிலும் உள்ள தொழில்நுட்ப வல்லுநா்கள், நிறுவனா்கள் மற்றும் கல்வியாளர்கள், தொழில்நுட்ப கண்டுபிடிப்பாளர்கள், தொழில்துறை தலைவா்களை ஈா்த்துள்ளது. இந்த உச்சிமாநாட்டில் 110-க்கும் மேற்பட்ட நாடுகள், 30 சர்வதேச நிறுவனங்கள், சுமார் 45 அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.

முதல்முறையாக தெற்குலகில் இந்தியாவால் நடத்தப்படும் இந்த உச்சிமாநாடு, "அனைவருக்கும் நலன், அனைவருக்கும் மகிழ்ச்சி" என்ற மனிதகுலத்திற்கான வழிகாட்டும் உணர்வை தேசிய தொலைநோக்குப் பார்வையுடனும் நாட்டின் நாகரிக தத்துவத்தை பிரதிபலிப்பதுடன், ஏஐ-யின் உலகளாவிய கொள்கையுடனும் இணைந்த மாற்றும் திறனைப் பிரதிபலிக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.

ஏஐ உச்சிமாநாடு, நிர்வாகம், பாதுகாப்பு மற்றும் சமூக தாக்கம் குறித்த உலகளாவிய ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட வளர்ந்து வரும் சர்வதேச செயல்முறையின் ஒரு பகுதியாகும்.

இந்தியாவின் உருமாற்றத் திறன் மற்றும் செயற்கை நுண்ணறிவு தாக்கம் உச்சி மாநாடு 2026, மக்கள், பூமி மற்றும் முன்னேற்றம் என்பதை சுற்றியே கட்டமைக்கப்பட்டுள்ளது. ஏஐ அமைப்புகள் உலகெங்கிலும் உள்ள சமூகங்களில் உருவாக்கப்படும் அறிவு மற்றும் தரவைப் பயன்படுத்துகின்றன. எனவே, ஏஐ-யின் நன்மைகள் அனைவருக்கும் பரவ வேண்டும் என்பதே நோக்கமாகக் கொண்டுள்ளன, இது உரிமைகளைப் பாதுகாப்பது மற்றும் சமூகம் முழுவதும் சமமான நன்மைகளை உறுதி செய்வது, சுற்றுச்சூழல் ரீதியாக நிலையான முன்னேற்றம் மற்றும் உள்ளடக்கிய பொருளாதார மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தை உறுதி செய்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, தனியார் செய்தி நிறுவனத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அளித்த சிறப்பு நேர்காணலில், ஐடி துறையில் செயற்கை நுண்ணறிவு(ஏஐ) தாக்கம் மற்றும் துறையை வலுப்படுத்துவதற்கான அரசின் உத்திகள் குறித்து பேசினார்.

இந்தியாவின் ஐடி துறை நமது சேவைகள் ஏற்றுமதியின் முதுகெலும்பாகவும் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய உந்துசக்தியாகவும் இருந்து வருகிறது. ஏஐ இந்தத் துறைக்கு ஒரு மகத்தான வாய்ப்பையும் சவாலையும் முன்வைக்கிறது. ஏஐ அவுட்சோர்சிங் அலைகளால் இயக்கப்படும் இந்தியாவின் ஐடி துறை 2030-க்குள் சுமார் 36 லட்சம் கோடியை எட்டும் என்று ஏஐ சந்தை கணிப்புகள் தெரிவிக்கின்றன என்று அவர் கூறியுள்ளார்.

Google CEO Sundar Pichai on Wednesday met Prime Minister Narendra Modi here in the national capital. Pichai is here for the Global AI Impact Summit 2026 and will deliver the keynote address on February 20 at the summit.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிறக்கும்போதே குழந்தைகளுக்கு ஏற்படும் பரம்பரை நோய்! என்ன காரணம்?

தவறாக வெளியான காலமானார் செய்தி! நோபல் பரிசுக்கு வழிவகுத்ததா?

அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெறும்!

வரவேற்பைப் பெற்ற காதலர் நாள் மறுவெளியீட்டுத் திரைப்படங்கள்!

சுட்டும் விழி சுடரே தொடரில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகர்!

SCROLL FOR NEXT