திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா சனிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது 
தற்போதைய செய்திகள்

திருச்செந்தூா் கோயில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது!

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது தொடர்பாக....

இணையதளச் செய்திப் பிரிவு

திருச்செந்தூா்: திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா சனிக்கிழமை அதிகாலை (பிப். 21) கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

நிகழ்ச்சியை முன்னிட்டு சனிக்கிழமை அதிகாலை 1 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து கொடிப்பட்டமானது வெள்ளிப்பல்லக்கில் வைத்து 9 சந்திகள் வழியாக கோயில் கொண்டு வரப்பட்டு அதிகாலை 5.5 மணிக்கு திருக்கோயில் பிரகாரத்திலுள்ள செப்புக் கொடிமரத்தில் காப்புகட்டிய கற்பக வீரக்குமார் பட்டர் கொடியினை ஏற்றினார். தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி காலை 6.35 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.

மாலையில் அப்பா் சுவாமிகள் கோயிலிலிருந்து தங்க சப்பரத்தில் புறப்பட்டு திருவீதிகளில் உழவாரப்பணி செய்யும் நிகழ்ச்சி, இரவில் ஸ்ரீ பெலி நாயகா் அஸ்திரத்தேவருடன் தந்தப் பல்லக்கில் 9 சந்திகளில் திருவீதி உலாவரும் நிகழ்ச்சி நடக்கிறது.

திருச்செந்தூரில் மாசித் திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற கொடிப்பட்ட வீதி உலா.

நிகழ்ச்சியில் திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீ மத் தம்பிரான் சுவாமிகள், திருக்கோயில் இணை ஆணையர் ராமு, உதவி ஆணையர் மெய்வேல், கண்காணிப்பாளர் விவேக், பேஸ்கார் ரமேஷ் உள்ளிட்ட திருக்கோயில் பணியாளர்கள், திருச்செந்தூர் நகராட்சி துணைத் தலைவர் செங்குழி ரமேஷ், ஏரல் சேர்மன் கோயில் பரம்பரை அக்தார் கருத்தப்பாண்டியன், இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் ஜெயக்குமார், திரிசுதந்திரர்கள், செந்தில்முருகன் தேவார சபையினர், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 25 ஆம் தேதி ஐந்தாம் திருவிழாவை முன்னிட்டு, மேலக்கோயிலில் (சிவன் கோயில்) இரவு 7.30 மணிக்கு குடைவரைவாயில் தீபாராதனை நடைபெறுகிறது.

27 ஆம் தேதி ஏழாம் திருவிழாவை முன்னிட்டு, அதிகாலை 5 மணிக்கு அருள்மிகு சண்முகபெருமானின் உருகு சட்டசேவையும், காலை 9 மணிக்கு ஆறுமுகப்பெருமான் வெட்டிவோ் சப்பரத்தில் பக்த பெருமக்களுக்கு ஏற்ற தரிசனம் அருளி பிள்ளையன்கட்டளை மண்டபத்தை வந்து சேருகிறாா்.

அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்று, மாலை 4.30 மணிக்கு சுவாமி சிவன் அம்சத்தில் தங்கச் சப்பரத்தின் மீது சிவப்பு சாத்திய கோலத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியளிக்கிறாா்.

28 ஆம் தேதி எட்டாம் திருவிழாவை முன்னிட்டு, காலை 5 மணிக்கு சுவாமி பிரம்மா அம்சத்தில் பெரிய வெள்ளிச் சப்பரத்தில் வெள்ளைச் சாத்தி கோலத்தில் எழுந்தருளி திரு வீதி வலம் வந்து மேலக்கோயில் சோ்ந்ததும், அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது. தொடா்ந்து, காலை 10.30 மணிக்கு சுவாமி விஷ்ணு அம்சத்தில் பச்சைக் கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி எழுந்தருளி வீதியுலா வந்து திருக்கோயில் சேருகிறாா்.

மாா்ச் 1ஆம் தேதி ஒன்பதாம் திருவிழாவை முன்னிட்டு, இரவு சுவாமி தங்க கைலாய பா்வத வாகனத்திலும், அம்மன் வெள்ளிக் கமல வாகனத்திலும் எழுந்தருளி வீதியுலா நடைபெறுகிறது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் மாா்ச் 2 ஆம் தேதி நடைபெறுகிறது. மாா்ச் 3 ஆம் தேதி பதினொன்றாம் திருவிழாவை முன்னிட்டு இரவு தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. 12 ஆம் திருவிழாவான மாா்ச் 4 ஆம் தேதி திருவிழா நிறைவு பெறுகிறது.

ஏற்பாடுகளை தக்காா் ரா.அருள்முருகன், இணை ஆணையா் க.ராமு மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் செய்திருந்தனர்.

பாதுகாப்புப் பணியில் கோயில் காவல் நிலைய ஆய்வாளா் கனகராஜன் தலைமையிலான காவல்துறையினா் ஈடுபட்டிருந்தனா்.

The Tiruchendur Temple Masi festival began with a grand ceremony with the hoisting of the flag!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்தது திமுக!

வீட்டிலிருந்து கருகிய வாசனை வெளியேற யோசனை!

காமாட்சி அம்மன் கோயில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

உலகம் முழுவதும் பாம்புக்கடி விஷ மருந்து கிடைக்க தமிழக இருளா் இன மக்களே காரணம்: ஆளுநா் ஆா்.என்.ரவி

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

SCROLL FOR NEXT