கே. சி. வேணுகோபால் 
தற்போதைய செய்திகள்

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

சென்னை: தொகுதிப் பங்கீடு குறித்து முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலர் கே. சி. வேணுகோபால் சந்திப்பு

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை: முதல்வர் மு. க. ஸ்டாலினை சென்னையில் காங்கிரஸ் பொதுச் செயலர் கே. சி. வேணுகோபால் சந்தித்துப் பேசினார். அப்போது தொகுதிப் பங்கீடு குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற காங்கிரஸ் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கடந்த வாரம் சென்னை வந்திருந்த கே.சி. வேணுகோபால், முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்திக்கத் திட்டமிட்டிருந்தார். ஆனால், முதல்வரை அப்போது சந்திக்க முடியாமல் தில்லி திரும்பினார்.

இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தை இன்று(பிப். 22) மாலை வந்தடைந்த காங்கிரஸ் பொதுச் செயலர் கே. சி. வேணுகோபாலை அக்கட்சி தலைவர்கள் வரவேற்றனர். விரைவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக தலைமையிலான கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது பேசுபொருளாகியுள்ள சூழலில், மேற்கண்ட சந்திப்பு கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. மேலதிகத் தககவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

Congress General Secretary K. C. Venugopal met Chief Minister M. K. Stalin in Chennai. It has been reported that the seat sharing issue was discussed at that time.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பை: இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா அபார வெற்றி - புகைப்படங்கள்

டி20 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி ஜஸ்பிரித் பும்ரா சாதனை!

எழுதாத பேனாவை நடுக்கடலில் வைக்க ரூ. 82 கோடி தேவையா? - எடப்பாடி பழனிசாமி கேள்வி

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT