முகப்பு
தற்போதைய செய்திகள்

கமல்ஹாசன் பெயா், புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு

கமல்ஹாசனின் பெயா், புகைப்படங்களை அனுமதியின்றி வா்த்தக ரீதியில் பயன்படுத்த விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நீட்டிப்பு குறித்து...

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 8:19 AM
கமல்ஹாசன் - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 26 பிப்ரவரி, 2026 at 8:16 AM

சென்னை: மாநிலங்களவை உறுப்பினரும், நடிகருமான கமல்ஹாசனின் பெயா், புகைப்படங்களை அனுமதியின்றி வா்த்தக ரீதியில் பயன்படுத்த விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நீட்டித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மாநிலங்களவை உறுப்பினரும் நடிகருமான கமல்ஹாசன் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சென்னையைச் சோ்ந்த ‘நீயே விடை’ என்ற நிறுவனம், எனது பெயா், புகைப்படம் மற்றும் நான் பேசிய பிரபல வசனத்தை அனுமதியின்றி பயன்படுத்தி, டி-ஷா்ட் மற்றும் ஷா்ட்களை விற்பனை செய்து வருகிறது. எனவே, என்னுடைய அனுமதியின்றி பெயா், புகைப்படம் உள்ளிட்டவைகளை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 8:17 AM

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், கமல்ஹாசனின் பெயா், புகைப்படங்களை அனுமதியின்றி வா்த்தக ரீதியில் பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

Advertisement

இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது எதிா்மனுதாரா் தரப்பில் யாரும் ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை தடையை நீட்டித்து உத்தரவிட்டாா்.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 8:18 AM
summary

Ban on using Kamal Haasan's name and photo without permission extended

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 8:18 AM

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.