முகப்பு
தற்போதைய செய்திகள்

குடும்ப பிரச்னை: மகனை கொலை செய்த தாய் தற்கொலை முயற்சி

கும்பகோணமத்தில் மகனை கொலை செய்த தாய், கை நரம்புகளை கத்தியால் துண்டித்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளது குறித்து...

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 11:10 AM
தற்கொலை
பகிர்:
Updated On : 28 பிப்ரவரி, 2026 at 10:58 AM

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கணபதி நகர் பகுதியை சேர்ந்தவர் சரண்யா (30).

இவருக்கு சாய் என்ற ஆறு வயது மகன் உள்ளான். இவரது கணவர் வினோத்குமார் (37). சென்னையில் கால் டாக்ஸி ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார்.

இவர்கள் குடும்ப பிரச்னை காரணமாக கடந்த நான்கு ஆண்டுகளாக தனித்தனியே பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

Advertisement

மகனைப் பார்ப்பதற்காக வினோத்குமார் ஆண்டுக்கு ஓரிரு முறை வந்து செல்வதாக கூறப்படுகிறது.

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 10:58 AM

ஆறு வயதான மகன் சாய், மகாமக குளம் அருகே உள்ள திருநாவுக்கரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் முதல் வகுப்பு படித்து வந்துள்ளான்.

கடந்த இரண்டு நாள்களுக்கு முன் வினோத்குமாரும்- சரண்யாவும் தொலைபேசியில் சண்டை போட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

இதனால் மன அழுத்தத்தில் இருந்த சரண்யா வெள்ளிக்கிழமை இரவு மகன் சாய் கழுத்தில் சுடிதார் துப்பட்டாவால் நெருங்கி கொன்றார். பின்னர் சரண்யா தனது கை நரம்புகளை கத்தியால் துண்டித்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

மகனை கொலை செய்து விட்டு தற்கொலைக்கு முயன்று உள்ளதாக உறவினர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து உறவினர்கள் பட்டீஸ்வரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததுடன் சரண்யா வசிக்கும் அக்கம் பக்கத்தில் வசிக்கும் நபர்களுக்கும் தொலைபேசியில் தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவல் தெரிந்ததும் அக்கம் பக்கத்தினர் மற்றும் காவல்துறையினர் சாயின் உடலை மீட்டதுடன் கையில் இருந்து அதிகயளவு ரத்தம் வெளியேறியதால் மயங்கிய நிலையில் கிடந்த சரண்யாவை ஆம்புலன்ஸ் வாகன மூலம் கும்பகோணம் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சரண்யாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 10:58 AM
summary

Mother attempts suicide after killing son over family dispute

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 10:58 AM

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.