முகப்பு
தற்போதைய செய்திகள்

உண்மையை மட்டும் பேசுங்கள் எதிர்கட்சித் தலைவரே: மு.வீரபாண்டியன்

மூத்த அரசியல் தலைவர் தோழர் ஆர்.நல்லகண்ணு மறைவுக்கு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி நேரில் வந்து அஞ்சலி செலுத்த தவறியதன் மீது மக்கள் விமர்சனங்கள் தொடர்பாக....

Updated On : 28 பிப்ரவரி 2026, 11:33 am IST
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் - கோப்புப்படம்
பகிர்:

மூத்த அரசியல் தலைவரின் மறைவுக்கு அதிமுக பொதுச் செயலாளர், எதிர்கட்சித் தலைவர் நேரில் வருவதும் மறுப்பதும் அவர்களது விருப்பம். தவிர்க்க முடியாத சூழல் காரணமாக வர இயலாமல் போவது இயல்பானது. ஆனால், எதிர்கட்சித் தலைவர் உண்மை பேச வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும், தமிழக மக்களின் பேரன்புக்கும் போற்றுதலுக்கும் உரிய மூத்த அரசியல் தலைவர் தோழர் ஆர்.நல்லகண்ணு பி.25 ஆம் தேதி பிற்பகலில் வயது மூப்பு காரணமாக காலமானார். எதிர்கட்சித் தலைவர் அவரது மறைவுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்த தவறியதன் மீது பொது மக்கள் மத்தியில் வினாவும் விமர்சனங்களும் எழுந்துள்ளன. இதற்கு எதிர்கட்சித் தலைவர் “எனது தயார் 2020- ல் காலமான போது கம்யூனிஸ்டு கட்சியினர் யாருமே வரவில்லை. இப்போது நான் ஏன் போகணும்” எனச் சொல்லியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement

மூத்த அரசியல் தலைவரின் மறைவுக்கு அதிமுக பொதுச் செயலாளர், எதிர்கட்சித் தலைவர் நேரில் வருவதும் மறுப்பதும் அவர்களது விருப்பம். தவிர்க்க முடியாத சூழல் காரணமாக வர இயலாமல் போவது இயல்பானது. ஆனால், எதிர்கட்சித் தலைவர் உண்மை பேச வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

எடப்பாடி கே.பழனிசாமியின் தாயார் காலமான போது, அவரது மறைவுக்கு நேரில் சென்று அஞ்சலி தெர்விக்க வேண்டும் என்ற கட்சியின் முடிவுப்படி இப்போதைய மாநிலத் துணைச் செயலாளர் நா.பெரியசாமி, பொருளாளர் முன்னாள் எம்எல்ஏ தோழர் எம்.ஆறுமுகம் இருவரும், அவரது கிராமத்து வீட்டுக்கு நேரில் சென்று அஞ்சலி தெரிவித்து, எடப்பாடியாரிடம் துக்கம் விசாரித்ததை ஏன் மறுத்தும், மறைத்தும் பேச வேண்டும்?

துக்க வீட்டில் அப்போதைய மதுவிலக்கு துறை அமைச்சர் பி.தங்கமணி, எம்.ஆறுமுகம், நா.பெரியசாமி ஆகியோரை அறிமுகம் செய்த போது “ஆறுமுகத்தை எனக்கு நல்லாத் தெரியும்” என கூறியது மறந்து போனதா?

இந்த நிகழ்வின் போது வெளியூர் நிகழ்ச்சியில் இருந்த, கட்சியின் அப்போதைய மாநிலச் செயலாளர் முத்தரசன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஏழுமலை இருவரும் “முதல்வர்” எடப்பாடி கே.பழனிசாமியை, சென்னை பசுமை வழி சாலையில் உள்ள அவரது அரசு இல்லத்திற்கு நேரில் சென்று துக்கம் விசாரித்து, அவரது தாயாரின் திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி வந்தது அனைவரும் அறிந்த செய்தியாகும்.

எது எப்படியோ, அதிமுக நிறுவப்பட்ட காலத்தில் எம்ஜிஆர்-க்கு பக்கபலமாக இருந்து உதவிய, இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியும், அதன் தலைவர்கள் எம். கல்யாண சுந்தரம், கே.பாலதண்டாயுதம், ப.மாணிக்கம் போன்ற தலைவர்களுடன் இணைந்து நின்றவர் தோழர் நல்லகண்ணு என்பதை வரலாறு பதிவு செய்துள்ளது என்பதை மறந்து விடாதீர்கள்.

உண்மை பேசுங்கள். எதிர்கட்சித் தலைவரே, உண்மையை மட்டும் பேசுங்கள்... என அவர் கூறியுள்ளார்.

summary

Speak only the truth, Opposition Leader says M. Veerapandian

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments