சட்டப்பேரவையில் மூத்த தலைவர்களின் மறைவுக்கு இன்று இரங்கல் தீர்மானம்!
தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெறும் இரங்கல் தீர்மானம் குறித்து...
தமிழக சட்டப்பேரவையில் மூத்த தலைவர்களின் மறைவுக்கு இன்று இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.
தமிழகத்தின் 17 ஆவது சட்டப்பேரவையில் வியாழக்கிழமையில் ஆளுநர் உரை நடந்து முடிந்த நிலையில், அடுத்ததாக ஜூன் 19, 22, 23 ஆகிய மூன்று நாள்களுக்கு சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடைபெறும் என பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த 3 நாள்களிலும் வினா - விடை நேரம் இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், இன்றைய கூட்டத்தொடரில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள், மூத்த தலைவர்களின் மறைவுக்கு இரங்கல் குறிப்புகள் தெரிவிக்கப்படவுள்ளன.
Advertisement
Advertisement
மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர். நல்லகண்ணு, சட்டப்ப்பேரவை முன்னாள் செயலாளர் சி.கு. ராமசாமி, திரைப்படத் தயாரிப்பாளர்கள் ஆர்.பி. சௌத்ரி, கே. ராஜன், திரைப்பட இயக்குநர் பாரதிராஜா உள்ளிடோரின் மறைவுக்கு இரங்கல் தீர்மானமும் நிறைவேற்றப்படவுள்ளன.
தொடர்ந்து, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டு விவாதம் தொடங்கப்படும்.
அதுமட்டுமின்றி, மேக்கேதாட்டு அணை விவகாரத்தை எதிர்த்து இன்று (ஜூன் 19) தனித்தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. இந்தத் தீர்மானத்தை முதல்வர் விஜய் முன்மொழிகிறார்.
இதனைத் தொடர்ந்து, ஜூன் 22 ஆம் தேதியில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதமும், ஜூன் 23-ல் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பதிலுரையும் வழங்கப்படும்.
மேலும், அமைச்சர்களில் பெரும்பாலானோர் புதியவர்கள் என்பதால், இந்த 3 நாள் கூட்டத்தொடரிலும் வினா - விடை விவாதம் இருக்காது என்றும் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்தார்.
Tamilnadu Legislative Assembly session will be held for three days
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.