உங்கள் பெயரைத் சுமந்துச் செல்வது, என் வாழ்நாளின் கௌரவங்களில் ஒன்று: ஜானகி மறைவுக்கு த்ரிஷா இரங்கல்
பாடகி எஸ். ஜானகி மறைவுக்கு த்ரிஷா இரங்கல் தெரிவித்தது தொடர்பாக...
பின்னணிப் பாடகி எஸ். ஜானகி மறைவுக்கு நடிகை த்ரிஷா இரங்கல் தெரிவித்துள்ளார்.
எஸ். ஜானகி (88) முதுமையால் ஏற்படும் உடல்நல பாதிப்பு காரணமாக சனிக்கிழமை (ஜூலை 11) காலமானார். அவருக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து நடிகை த்ரிஷா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில், ”என்னுடைய மிகவும் சிறப்பான திரைப்படங்களில் ஒன்றில் உங்கள் பெயரைத் சுமந்துச் செல்வது, என் வாழ்நாளின் மிகப்பெரிய கௌரவங்களில் ஒன்றாக என்றென்றும் திகழும்.
Advertisement
Advertisement
ஆனால், உங்களை அறிந்துகொண்டதும், உங்கள் அன்பைப் பெற்றதும் நான் என்றென்றும் போற்றிப் பாதுகாக்கும் ஒரு விஷயமாக இருக்கும்.
உங்கள் அரவணைப்பு, கனிவு, சிரிப்பு மற்றும் 'சிறந்த கலைஞர்கள் எப்போதும் மிகவும் கணிவான உள்ளம் கொண்டவர்கள்' என்பதை எனக்கு நினைவூட்டியதற்கு நன்றி. உங்கள் குரல் என்றென்றும் நிலைத்திருக்கும்.
அமைதியாக இளைப்பாறுங்கள் ஜானகி அம்மா, உங்களை நான் மிகவும் மிஸ் செய்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Actress Trisha has expressed her condolences over the passing of playback singer S. Janaki.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.