FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பாடகி ஜானகி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

பாடகி ஜானகி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தது தொடர்பாக....

Updated On : 12 ஜூலை 2026, 8:25 am IST
பாடகி எஸ். ஜானகி - கோப்புப்படம்
பகிர்:

பின்னணிப் பாடகி எஸ். ஜானகி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

எஸ். ஜானகி (88) முதுமையால் ஏற்படும் உடல்நல பாதிப்பு காரணமாக சனிக்கிழமை (ஜூலை 11) காலமானார்.

கர்நாடக மாநிலம், மைசூரில் தங்கியிருந்த அவரின் உடல்நிலை மோசமடைந்ததால், அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இதயம் செயலிழந்து அவா் உயிரிழந்தார் என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இது குறித்து பிரதமர் மோடி தன்னுடைய ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், “புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி அம்மா அவர்களின் மறைவு, இசையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத ஒரு பேரிழப்பு. பல்வேறு மொழிகளில் அவர் பாடிய பாடல்கள், பல தலைமுறையினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.

இணையற்ற கருணையுடனும் பன்முகத்தன்மையுடனும் ஒவ்வொரு உணர்வையும் அவர் தனது குரல்வளம் மூலம் வெளிப்படுத்தினார். அவரது இனிமையான பாடல்கள் வரும் காலங்களிலும் கேட்போரை மயக்க வைக்கும்.

துயரமான இந்தத் தருணத்தில், அவரது குடும்பத்தினர், எண்ணற்ற ரசிகர்கள் மற்றும் ஒட்டுமொத்த இசைச் சமூகத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஓம் சாந்தி” என்று குறிப்பிட்டுள்ளார்.

summary

Prime Minister Narendra Modi has expressed his condolences over the passing of playback singer S. Janaki

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments