இன்றைய செய்திகள் ஜூலை 12 - நேரலை
முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள தினமணியுடன் இணைந்திருங்கள்...
ஹோர்முஸ் நீரிணையில் சரக்குக் கப்பலை தாக்கிய ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்!
ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க ராணுவம் அறிவித்துள்ளது.
பஹ்ரைன், கத்தார், குவைத் மீது ஈரான் தாக்குதல்! செல்போன்களில் அவசர எச்சரிக்கை!
மத்திய கிழக்கில் உள்ள பஹ்ரைன், கத்தார், குவைத் போன்ற நாடுகளின் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
கடற்கரை - செங்கல்பட்டு இடையே இன்று 41 புறநகர் ரயில்கள் ரத்து!
பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (ஜூலை 12) சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே 41 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
பாடகி ஜானகி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!
பின்னணிப் பாடகி எஸ். ஜானகி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
உங்கள் பெயரை சுமந்துச் செல்வது, என் வாழ்நாளின் கௌரவங்களில் ஒன்று: ஜானகி மறைவுக்கு த்ரிஷா இரங்கல்வங்கக்கடலில் மிதமான நிலநடுக்கம்: விசாகப்பட்டினத்திலும் உணரப்பட்டது
ஆந்திரப் பிரதேச கடற்கரையை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
உங்கள் பெயரை சுமந்துச் செல்வது, என் வாழ்நாளின் கௌரவங்களில் ஒன்று: ஜானகி மறைவுக்கு த்ரிஷா இரங்கல்
பின்னணிப் பாடகி எஸ். ஜானகி மறைவுக்கு நடிகை த்ரிஷா இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாக மூடப்படுகிறது; மீறினால் தாக்குவோம்! ஈரான் அறிவிப்பு!
ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 12) அறிவித்துள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு நாளை முதல் கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
பள்ளி மாணவர்களுக்கு நாளை(ஜூலை 13) முதல் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
மைசூரு மகாராஜா கல்லூரி திடலில் வைக்கப்பட்டுள்ள ஜானகி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி!
மைசூரு மகாராஜா கல்லூரி திடலில் வைக்கப்பட்டுள்ள ஜானகி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி மாநாட்டில் அண்ணாமலை வெளியிடவுள்ள புதிய அறிவிப்பு என்ன?
பொள்ளாச்சியில் இன்று(ஜூலை 12) மாலை நடைபெறவுள்ள மாநாட்டில் அண்ணாமலை வெளியிடப்போகும் புதிய அறிவிப்பு குறித்த தகவல் தெரியவந்துள்ளது.
மறைந்த பாடகி ஜானகிக்கு குடியரசுத் தலைவர் இரங்கல்!வெனிசுவேலா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 4,300 ஆக உயர்வு!
வெனிசுவேலா நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களால் பலியானவர்களின் எண்ணிக்கை 4,300 ஆக உயர்ந்துள்ளது.
மறைந்த பாடகி ஜானகிக்கு குடியரசுத் தலைவர் இரங்கல்!
மறைந்த புகழ்பெற்ற பாடகி ஜானகிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 12) இரங்கல் தெரிவித்துள்ளார்.
சொந்த வாழ்வில் தாங்க முடியாத துயரம்... எஸ். ஜானகிக்கு இளையராஜா இரங்கல்!
இசையமைப்பாளர் இளையராஜா மறைந்த பாடகி எஸ். ஜானகிக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் மிதமான நிலநடுக்கம்: விசாகப்பட்டினத்திலும் உணரப்பட்டது
ஆந்திரப் பிரதேச கடற்கரையை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
வயநாடு நிலச்சரிவில் கடைசியாக தேடப்பட்டவரும் சடலமாக மீட்பு! பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!
கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் கடைசியாகத் தேடப்பட்ட ஹிமாசலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரும் இன்று (ஜூலை 12) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கேரளம்: துப்பாக்கி முனையில் பேருந்து டிக்கெட் பணத்தைக் கொள்ளையடித்தவர் 36 ஆண்டுகளுக்குப் பிறகு கைது
கேரளத்தில் துப்பாக்கி முனையில் அரசுப் பேருந்து டிக்கெட் வசூல் பணத்தைக் கொள்ளையடித்தவர் 36 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜூலை 15இல் விசாரணைக்கு ஆஜராவேன்: சென்னை திரும்பிய எ.வ. வேலு பேட்டி
ஜூலை 15ஆம் தேதி விசாரணைக்கு கட்டாயம் ஆஜராவேன் என்று திமுக முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பில்லை
சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வியத்நாம் படகு விபத்து: உயிர்பிழைத்த 16 இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர்
வியத்நாம் படகு விபத்தில் உயிர்பிழைத்த 16 இந்தியர்கள் தாயகம் திரும்பிக்கொண்டிருப்பதாக இந்திய தூதரகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி
பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
பாடகி ஜானகி உடல் தகனம்
மைசூரு எச்.டி. கோட்டை சாலையில் உள்ள பண்ணைத் தோட்டத்தில் பாடகி எஸ். ஜானகியின் உடல் தகனம் செய்யப்பட்டது.
அண்ணாமலை அமைப்பின் முதல் மாநாடு தொடக்கம்!
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அண்ணாமலையின் வீ தி லீடர்ஸ் அமைப்பின் முதல் மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. போதையில்லா தமிழகம் என்ற தலைப்பில் மாநாடு நடைபெற்று வருகிறது.
2026 போல 2031-ல் ஆட்சி மாற்றம் நடக்கும்!
2026-ல் நடந்ததைப்போல 2031 ஆம் ஆண்டு மற்றொரு ஆட்சி மாற்றம் நடக்கும் என வீ தி லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை இன்று (ஜூலை 12) தெரிவித்தார்.
வீ தி லீடர்ஸ் அமைப்பின் இலக்கை 50% எட்டிவிட்டோம்
வீ தி லீடர்ஸ் அமைப்பின் இலக்கை 50% எட்டிவிட்டோம் என அந்த அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை இன்று (ஜூலை 12) தெரிவித்தார்.
2031-ல் ஆட்சி மாற்றம் செய்து கடனை அடைப்பது நமது கடமை
மெய்யான சமூக நீதி, நிலையான வளர்ச்சி, வேளாண்மை எழுச்சி என்பதே வீ தி லீடர்ஸ் அமைப்பின் இலக்கு. பண்பாட்டு மீட்சி, ஆட்சியிலே புரட்சி என்பதே நமது அமைப்பின் தாரக மந்திரம் என அண்ணாமலை பேச்சு.
தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால் பிரிட்டன் வாழ் இந்தியர்கள் அடையும் பலன்!
பிரிட்டனில் பணிபுரியச் செல்லும் நமது இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பெரும்பாலும் மூன்று அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு, சில சமயங்களில் நிறுவனங்களுக்கு இடையிலான பணியிட மாற்றங்கள் மூலம் அங்கு செல்கிறார்கள்.
தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கு முன்பு, அவர்களின் ஊதியத்தில் சுமார் 25% உள்ளூர் அரசாங்கம் எடுத்துக்கொண்டது. அதனால் தொழிலாளிக்கு எந்தப் பயனும் கிடைக்கவில்லை.
இப்போது, நாங்கள் 'இரட்டைப் பங்களிப்பு ஒப்பந்தம்' (double contribution convention agreement) ஒன்றை இறுதி செய்துள்ளோம். இதுவும் 15-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
இதன் கீழ், சேவைத் துறையிலோ அல்லது பிற பணிகளிலோ ஐந்து ஆண்டுகள் வரை அங்கு பணிபுரியச் செல்லும் இந்தியர்களின் சம்பளத்தில் முன்பு உள்ளூர் அரசாங்கத்தால் எடுத்துக்கொள்ளப்பட்ட அந்த 25% தொகை, இனி இந்தியாவில் உள்ள அவர்களின் வருங்கால வைப்பு நிதி (Provident Fund) கணக்குகளில் வரவு வைக்கப்படும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.