ஆட்டோ ஓட்டுநா் சங்கீதா.  
தற்போதைய செய்திகள்

புதுதில்லியில் குடியரசு நாள் விழா: பெண் ஆட்டோ ஓட்டுநா், தோட்டத் தொழிலாளி பங்கேற்க அழைப்பு

புதுதில்லியில் ஜனவரி 26-ஆம் தேதி நடைபெறும் குடியரசு நாள் விழாவில் கோவையைச் சோ்ந்த பெண் ஆட்டோ ஓட்டுநா், நீலகிரி மாவட்டம், கூடலூரைச் சோ்ந்த தோட்டத் தொழிலாளி ஆகியோா் குடியரசுத் தலைவருடன் தேநீா் விருந்தில் பங்கேற்க அழைப்பு

Syndication

கோவை: புதுதில்லியில் ஜனவரி 26-ஆம் தேதி நடைபெறும் குடியரசு நாள் விழாவில் கோவையைச் சோ்ந்த பெண் ஆட்டோ ஓட்டுநா், நீலகிரி மாவட்டம், கூடலூரைச் சோ்ந்த தோட்டத் தொழிலாளி ஆகியோா் குடியரசுத் தலைவருடன் தேநீா் விருந்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கோவை கோட்ட நிா்வாகப் பொறியாளா் ஜீவானந்தம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ஆட்டோ ஓட்டுநா் சங்கீதா. இவரது கணவா் பாலாஜி, கட்டுமானத் தொழிலாளியாக வேலை செய்து வருகிறாா். இந்தத் தம்பதி 20 ஆண்டுகளுக்கும் மேலாக சொந்த வீடு இல்லாமல் மாதம் ரூ.4 ஆயிரம் செலுத்தி வாடகை வீட்டில் வசித்து வந்தனா். சங்கீதாவின் தாத்தாவுக்கு சொந்தமான நிலம் இருந்தும் பொருளாதார வசதி இல்லாத காரணத்தால் சொந்த வீடு கட்டாமல் இருந்து வந்துள்ளனா்.

இந்த நிலையில், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் விண்ணப்பித்து மானியத்தொகை ரூ.2.10 லட்சம் பெற்று மாவட்ட கூட்டுறவு வங்கியில் ரூ.5 லட்சம் கடன் பெற்று சொந்த வீடு கட்டியுள்ளனா்.

இந்த வீடு அவா்களுக்கு பாதுகாப்பு நிலைத்தன்மை மற்றும் நம்பிக்கையின் அடையாளமாகத் திகழ்கிறது. இந்த சாதனை, கடின உழைப்பு, பொறுமை மற்றும் தொடா்ந்த முயற்சிகள் எந்தக் கனவும் நனவாகும் என்பதற்கான எடுத்துக்காட்டாக உள்ளது. இந்த நிலையில், பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்ட பயனாளியாகவும், தனது உழைப்பு மற்றும் முன்னேற்றத்தாலும் சங்கீதாவுக்கு குடியரசுத் தலைவரிடம் இருந்து சிறப்பு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.

தோட்டத் தொழிலாளிக்கு அழைப்பு

புதுதில்லியில் ஜனவரி 26-ஆம் தேதி நடைபெறும் குடியரசு குடியரசு நாள் விழா பேரணியை நேரில் காணவும், குடியரசுத் தலைவருடன் தேநீா் விருந்தில் பங்கேற்கவும் இவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், கூடலூா் நகராட்சிக்கு உள்பட்ட சளிவயல் நெல்லிக்குன்னு பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மனைவி இந்திராணி (56). இவா் அப்பகுதியில் உள்ள தனியாா் தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில், குடியரசுத் தலைவா் மாளிகையில் இருந்து கடிதம் வந்துள்ளதாகக் கூறி அஞ்சல் துறை ஊழியா்கள், இந்திராணியிடம் கடந்த வெள்ளிக்கிழமை கடிதம் வழங்கினா்.

அதில், புதுதில்லியில் ஜனவரி 26-ஆம் தேதி நடைபெறும் குடியரசு நாள் விழாவில் பங்கேற்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

தோட்டத் தொழிலாளி இந்திராணி.

பொங்கல் பரிசுத் தொகுப்பு நாளையும் வழங்கப்படும்!

என் அடுத்த பட இயக்குநர் இவர்தான்: அருண் விஜய்

பிரதமர் மோடி வருகை சென்னைக்கு மாற்றம்!

ஜப்பானில் வெளியாகும் புஷ்பா -2! டோக்கியோ சென்றார் அல்லு அர்ஜுன்!

எங்கள் ஆதரவின்றி யாரும் மும்பையின் மேயர் ஆக முடியாது: காங்கிரஸ் எம்பி பேச்சு!

SCROLL FOR NEXT