பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை உயர்வால் எதிர்பார்த்த வியாபாரம் இல்லை 
தற்போதைய செய்திகள்

பூக்களின் விலை உயர்வால் எதிர்பார்த்த வியாபாரம் இல்லை: வியாபாரிகள் தகவல்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை உயர்வால் எதிர்பார்த்த வியாபாரம் இல்லை என வியாபாரிகள் தகவல்

இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் ஏராளமானோர் வழிபாட்டுக்காக பூக்களை அதிக அளவு கொள்முதல் செய்து வருகின்றனர்.

தஞ்சை மாவட்டத்தில் கரும்பு, மஞ்சள், பூக்கள் காய்கறிகள் என இறுதி கட்ட வியாபாரத்தில் வியாபாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இந்தநிலையில், பனிப்பொழிவு காரணமாக தஞ்சை மலர் வணிக சந்தைக்கு பூக்களின் வரத்து குறைந்துள்ளதால், பூக்களின் விலை கனிசமாக உயர்ந்துள்ளது.‌

இதுதொடர்பாக பூ வியாபாரிகள் கூறுகையில், தஞ்சை மலர் சந்தைக்கு கிராமங்களில் இருந்து அதிகயளவிலும், மாவட்டத்தின் இதரப் பகுதிகளில் இருந்து பரவலாகவும் பூக்கள் வரத்து இருக்கும். இவை தவிர அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் வரத்து இருக்கும். தற்போது பனி காரணமாக பூக்கள் துளிர்விடும் நிலையிலையே உதிர்ந்து விளைச்சல் குறைந்துள்ளது. இதனால், சந்தைக்கு பூக்களின் வரத்து குறைவு என்பதால் விலை ஏற்றம் உள்ளது.

முல்லைப் பூ கிலோ ரூ.2,000-க்கும், சாதி மல்லி ரூ.2,000, காக்கரட்டான் 1,500 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் பன்னீர் ரோஸ் கிலோ ரூ.400, செவ்வந்தி ரூ.50 முதல் ரூ.100 என விற்பனை செய்யப்படுகிறது. இதனால் எதிர்பார்த்து அளவிற்கு வியாபாரம் நடைபெறவில்லை என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். விலை உயர்ந்த முல்லை, சாதி மல்லி பூக்களை மக்கள் வாங்கவில்லை எனவும் மிகவும் குறைந்த விலையில் விற்கும் செவ்வந்தி பூக்களை மக்கள் அதிக அளவில் வாங்கி செல்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

Due to the increase in flower prices, business is not as expected: Traders inform

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொங்கல் வைக்க உகந்த நேரம்!

எம்ஜிஆரா? நம்பியாரா? கார்த்தியின் வா வாத்தியார் - திரை விமர்சனம்!

ரூ.45,000 சம்பளத்தில் இந்தியன் ரயில்வேயில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

இதயத்தில் துளைகளுடன் பிறக்கும் குழந்தைகள்! காரணம் என்ன?

ஐசிசி தரவரிசை: ரோஹித்தை பின்னுக்குத் தள்ளி விராட் கோலி முதலிடம்! 4 ஆண்டுகளுக்குப் பின்!

SCROLL FOR NEXT