விஜய் முன்னிலையில், தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் 
தற்போதைய செய்திகள்

தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் விஜய் முன்னிலையில், தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன்...

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் விஜய் முன்னிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தவெகவில் இணைந்தாா்.

அதிமுக முன்னாள் அமைச்சரும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான கு.கிருஷ்ணன், மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் விஜய் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை தவெகவில் இணைந்தாா்.

1991-96 ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் கு.ப. கிருஷ்ணன்.

ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான இவர் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டவர்.

பின்னர் அவர் செய்தியாளர்களுடன் பேசியதாவது:

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடைபெறபோகிறது. விஜய் தலைமையில் நல்லாட்சி நடைபெற போகிறது.

தேர்தல் ஆணையம் நாளைக்கே தேர்தல் வைத்தாலும் தவெக வெற்றி பெற்று விஜய் ஆட்சி அமைப்பார்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவையே மறந்துபோனவர்கள் அவர்களது ஆட்சியை எப்படி கொண்டுவருவார்கள். அவர்கள் மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள். எல்லா காலங்களிலும் எல்லாரையும் ஏமாற்ற முடியாது. தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது நிச்சயம். வெற்று பெறுவது விசில் உறுதி என கூறினார்.

Former AIADMK minister K.P. Krishnan joins the TVK

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வாரம் கலாரசிகன் - 25-01-2026

இரங்கலும் இரங்கல் நிமித்தமும்...

ரைட்டர் இயக்குநருடன் இணையும் பிரதீப் ரங்கநாதன்?

புறநானூற்றில் ஒரு தம்பி

இளநாகனாரின் நற்றிணைப் பாடல் திறன்

SCROLL FOR NEXT