விருதுநகர் மாவட்டத்தில் பல இடங்களில் வியாழக்கிழமை இரவு லேசான நில அதிர்வு காணப்பட்டது. 
தற்போதைய செய்திகள்

விருதுநகர் மாவட்டத்தில் பல இடங்களில் நில அதிர்வு!

விருதுநகர் மாவட்டத்தில் பல இடங்களில் வியாழக்கிழமை இரவு லேசான நில அதிர்வு காணப்பட்டது தொடர்பாக...

இணையதளச் செய்திப் பிரிவு

விருதுநகர் மாவட்டத்தில் பல இடங்களில் வியாழக்கிழமை இரவு லேசான நில அதிர்வு காணப்பட்டதால் மக்கள் வீடுகள், வணிக நிறுவனங்களிலிருந்தும் வெளியேறி சாலைகளில் கூடியதால் பரபரப்பு நிலவியது.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா், சிவகாசி, ராஜபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை இரவு 9.08 மணியளவில் ரிக்டரில் 3.0 அளவில் நில அதிா்வு ஏற்பட்டது. இதனால், மக்கள் அச்சமடைந்தனா்.

சிவகாசி, மாரனேரி, ஈஞ்சாா், நடுவப்பட்டி, ராஜபாளையம், சஞ்சீவிமலை, ஸ்ரீவில்லிபுத்தூா், கம்மாபட்டி, சீனியாபுரம், மொட்டமலை, வேப்பங்குளம், அத்திகுளம், கிருஷ்ணன்கோவில், மல்லி உள்ளிட்ட பகுதிகளில் வசிப்போர் நில அதிா்வை அதிகளவு உணர்ந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் வீடுகள், வணிக நிறுவனங்களிலிருந்தும் வெளியேறினா்.

மேலும், கட்டடங்கள் அல்லது உள்கட்டமைப்புகளுக்கு உடனடி சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை, வீடுகளிலிருந்த பொருள்கள் கீழே விழுந்தன.

இந்த நில அதிா்வு ரிக்டரில் 3.0 அளவில் உணரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த நில அதிா்வு குறைந்த தீவிரம் கொண்டது என்றும், அது எந்தவொரு பெரிய பாதுகாப்பு அச்சங்களையும் ஏற்படுத்தவில்லை என்று உள்ளூர் அதிகாரிகளும் பேரிடர் மீட்புக் குழுக்களும் உறுதிப்படுத்தின.

இந்த இயற்கை நிகழ்வு குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் என கேட்டுக்கொண்ட அதிகாரிகள், நில அதிர்வின் போது பின்பற்ற வேண்டிய அடிப்படை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் குடியிருப்பாளர்களுக்கு நினைவூட்டினர்.

இதுகுறித்து புவியியல் வல்லுநா்கள் நில அதிர்வு உணரப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்த பின்னரே முழுமையான விவரம் தெரியவரும் என வருவாய்த் துறையினா் தெரிவித்தனா்.

இந்த நில அதிர்வால் சேதங்கள் அல்லது காயங்கள் குறித்த எந்தத் தகவல்களும் இல்லை.

இந்த இயற்கை நிகழ்வானது அந்த பகுதி மக்களிடையே சிறிது நேரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, பின்னர் இயல்பு நிலை திரும்பியது.

A mild earthquake was felt in Virudhunagar district on Thursday night, officials and residents reported, causing momentary tremors but no immediate reports of damage or injuries. The natural event briefly unsettled local communities before normalcy returned.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வள்ளலாா் நினைவு தினம்: பிப்.1-இல் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

162 பயனாளிகளுக்கு ரூ.1.65 கோடி நலத்திட்ட உதவி: செங்கல்பட்டு ஆட்சியா் வழங்கினாா்

தலைமைச் செயலகத்துக்கு நடைப்பயணம்: 87 தொழிலாளா்கள் கைது

சோழா் கால விஷ்ணு சிற்பம் கண்டுபிடிப்பு

போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசளிப்பு

SCROLL FOR NEXT