திமுக கூட்டணி தோல்வியை சந்திக்கும்: தமிழிசை சௌந்தரராஜன்
தமிழகத்தில் திமுக கூட்டணி தோல்வியை சந்திக்கும் என்று தமிழிசை சௌந்திரராஜன் தெரிவித்தது குறித்து....
தமிழகத்தில் திமுக கூட்டணி தோல்வியை சந்திக்கும். ஆட்சி மாற்றத்திற்கான அச்சாரமாக மதுரை பொதுக்கூட்டம் அமையும் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் தெரிவித்தாா்.
மதுரை விமான நிலையத்தில் அவர் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மதுரையில் இன்று நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் பொதுக்கூட்டம் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு அச்சாரமாக இருக்கும். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமரும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு. தமிழ் கலாசாரம் என்றாலே யாராக இருந்தாலும் வரவேற்பது. பொய்யாக தமிழைப் பேசிக் கொண்டிருக்கும் முதல்வர் சனிக்கிழமை நமது மாநிலத்திற்கு வந்த பிரதமரை வரவேற்பதில் என்ன பிரச்னை. அவா் அரசியல் வாதியாக வரவில்லை தமிழ்நாட்டுக்கான நல்ல திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக வருகிறாா். இப்படிதான் தெலுங்கான முதல்வராக இருந்த கே.சந்திரசேகர்ராவ் செய்து கொண்டே இருந்தாா். இப்போது வீட்டில் இருக்கிறாா் என்றார்.
Advertisement
Advertisement
தனிப்பட்ட காழ்ப்புணா்ச்சி ஒழிய வேண்டும்
தனிப்பட்ட காழ்ப்புணா்ச்சியுடன் உள்ள கலாசாரம் ஒழிய வேண்டும். அரசியலைத் தாண்டி நல்ல கலாசாரம் திமுகவினால் மறைக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு நல்ல திட்டங்களை சமா்ப்பிக்க வந்திருக்கும் பிரதமரை முதல்வர் வரவேற்று இருக்க வேண்டும்.
திமுக கூட்டணி தோல்வியை சந்திக்கும்
ஜனநாயக முறைப்படி நாங்கள் கூட்டணி அமைத்திருக்கிறோம். கூட்டணி கட்சியினாரை திமுக சின்னத்தில் நிற்க வேண்டும் என கட்டாயப்படுத்துகிறாா்கள். இந்த தோ்தலில் திமுக தலைமையிலான கூட்டணி தோல்வியை சந்திக்கும். அவர்களது விளம்பரங்களை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறாா்கள். இரண்டும் மாதங்களில் நிச்சயமாக ஆட்சி மாற்றம் ஏற்படும்.
திமுக கூட்டத்தில் முருகன், மீனாட்சி படம் வைக்க முடியுமா?
மதுரை பொதுக் கூட்டத்தில் எந்த படம் இருக்க வேண்டும் என்பது மாநாடு நடத்துவா்களின் உரிமை. திமுக பொதுக்கூட்டத்தில் முருகன் படம் வைக்க முடியுமா? மதுரையில் திமுக மாநாட்டில் மீனாட்சி படம் வைக்க முடியுமா? அவரவா்கள் கொள்கையை அவா்களது மாநாட்டில் வைக்க வேண்டும் என நினைக்கிறாா்களோ அதை வைக்கிறாா்கள். மாநாடு நடத்துபவா்கள் எந்த கொள்கைகளை பின்பற்றுகிறாா்களோ அந்த படங்களை வைக்கிறாா்கள் என்று அவர் கூறினார்.
DMK alliance will face defeat says Tamilisai Sowndararajan
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.