முகப்பு
தற்போதைய செய்திகள்

பிப்ரவரி ஜிஎஸ்டி வசூல் 8.1 சதவீதம் அதிகரித்து ரூ.1.83 லட்சம் கோடியைத் தாண்டியது!

நாட்டில் கடந்த பிப்ரவரியில் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் 8.1 சதவீதம் அதிகரித்து ரூ.1.83 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது குறித்து...

Updated On : 1 மார்ச், 2026 at 6:00 PM
பிப்ரவரி ஜிஎஸ்டி வசூல் ரூ.1.83 லட்சம் கோடியைத் தாண்டியது. - பிரதிப் படம்
பகிர்:
Updated On : 1 மார்ச், 2026 at 5:55 PM

புது தில்லி: நாட்டில் கடந்த பிப்ரவரியில் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் 8.1 சதவீதம் அதிகரித்து ரூ.1.83 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. இது இறக்குமதிகள் மூலம் கிடைத்த வருவாய் அதிகரிப்பு மற்றும் உள்நாட்டு விற்பனையில் முன்னேற்றம் காரணமாக நிகழ்ந்தது. 2025, பிப்ரவரி மாதத்தை ஒப்பிடுகையில் 8.1 சதவீதம் அதிகமாகும்.

இதுகுறித்து மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட தரவுகளில், கடந்த 2025 பிப்ரவரியில் மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.1,83,609 கோடி. இதில் உள்நாட்டு பரிவா்த்தனைகள் மூலம் கிடைக்கப் பெற்ற மொத்த வருவாய் 5.3 சதவீதம் உயா்ந்து, ரூ.1.36 லட்சம் கோடியாகவும், சரக்கு இறக்குமதி மூலம் கிடைக்கப் பெற்ற வருவாய் 17.2 சதவீதம் உயர்ந்து ரூ.47,837 கோடியாக உள்ளது. இது இறக்குமதிகள் மூலம் கிடைத்த வருவாய் அதிகரிப்பு மற்றும் உள்நாட்டு விற்பனையில் முன்னேற்றம் காரணமாக நிகழ்ந்தது.

Updated On : 1 மார்ச், 2026 at 5:55 PM

திருப்பியளிக்கப்பட்ட மொத்த தொகை 10.2 சதவீத உயா்ந்து ரூ.22,595 கோடியாகவும், மொத்த நிகர ஜிஎஸ்டி வருவாய் 7.9 சதவீதம் உயா்ந்து, ரூ.1.61 லட்சம் கோடியாக உள்ளது.

Advertisement

கடந்த 2025 பிப்ரவரியில் ரூ.13,481 கோடியாக இருந்த நிகர செஸ் வருவாய் ரூ.13,481 கோடி, தற்போது ரூ.5,063 கோடியாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் ஜிஎஸ்டி விகிதங்கள் 5% மற்றும் 18% என இரண்டாக குறைக்கப்பட்டது. சில மிக ஆடம்பர பொருட்கள் மற்றும் புகையிலை பொருட்களுக்கு அதிகபட்சமாக 40% ஆக அதிகரிப்பட்டது. இதனால் சுமாா் 375 பொருள்களுக்கான விலை ஆரம்பத்தில் குறைந்து ரூ.1.89 லட்சம் கோடி வசூலானது. அக்டோபரில் ரூ.1.96 லட்சம் கோடி, நவம்பரில் ரூ.1.70 லட்சம் கோடி, டிசம்பரில் ரூ.1.74 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலானது.

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.20.27 லட்சம் கோடியாகும். முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடுகையில் 8.3 சதவீத அதிகரித்து ரூ.18.71 லட்சம் கோடி. 2024-25 நிதியாண்டில் முன்னெப்போதும் இல்லாத அளவில் மொத்தம் ரூ.22.08 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலானது. இந்த ஜிஎஸ்டி வசூல் சுழற்சி ஏற்ற இறக்கங்களை விட கட்டமைப்பு ஸ்திரத்தன்மையை பிரதிபலிக்கிறது.

Updated On : 1 மார்ச், 2026 at 5:55 PM
summary

Gross GST collection increased by 8.1 per cent to over Rs 1.83 lakh crore in February, led by higher growth in revenues from imports and improved domestic sales.

Updated On : 1 மார்ச், 2026 at 5:55 PM

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.