முகப்பு
தற்போதைய செய்திகள்

அய்யா வைகுண்டரின் சமத்துவம் பேணுவோம்! - முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

அய்யா வைகுண்டரின் பொன்மொழிகளைப் பின்பற்றி நடப்போம்! சமத்துவம் பேணுவோம்! என்று முதல்வர் வாழ்த்து குறித்து...

Updated On : 4 மார்ச் 2026, 9:09 am IST
அய்யா வைகுண்டா் அவதார நாள்
பகிர்:

அய்யா வைகுண்டரின் பொன்மொழிகளைப் பின்பற்றி நடப்போம்! சமத்துவம் பேணுவோம்! என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

அய்யா வைகுண்டா் அவதார நாளையொட்டி, அய்யா வழி பக்தா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

முத‌ல்​வ‌ர் மு.க.‌ஸ்​டா​லி‌ன் வெளி​யி‌ட்ட வா‌ழ்‌த்​து‌ச் செ‌ய்​தி​யி‌ல்,

Advertisement

Advertisement

இடுப்பில் இருந்த துண்டைத் தலைக்குக் கிரீடமாக மாற்றிய அய்யா வைகுண்டரை நாம் பெற்ற நாள்!

"கீழ் நோக்கிப் பிடித்தாலும், மேல் நோக்கியே எரியும் தீபத்தைப்போல, விளக்கின் ஒளியாய், வீரத் தனமாக இருங்கள்" எனச் சமத்துவக் கனலைச் சமூகத்தில் விதைத்து நிறைந்தவர் அய்யா வைகுண்டர்.

'தாழக் கிடப்பாரைத் தற்காப்பதே தர்மம்' எனும் அவரது கூற்றையே ஆட்சிக்கான அடிப்படையாய்க் கொண்டு நலிந்தோரின் நலம் நாடும் அரசாக நமது திராவிட மாடல் அரசும் செயல்படுகிறது.

அய்யா வைகுண்டரின் பொன்மொழிகளைப் பின்பற்றி நடப்போம்! சமத்துவம் பேணுவோம்! என‌‌க் குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் மாசி 20 ஆம் தேதி அய்யா வைகுண்டர் அவதார நாள்விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது சித்தாந்தம் "நீ தேடும் இறைவன் உனக்குள்ளேயே இருக்கின்றான" என்பதாக இருக்கிறது.

summary

AiyyaVaikundar Birthday greetings cm stalin

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.