முகப்பு
தற்போதைய செய்திகள்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் ஆலய தேர்த் திருவிழாவுக்கு தடை: அண்ணாமலை கண்டனம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் ஆலயத்தின் பங்குனி உத்திர தேர்த் திருவிழாவுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்க மருத்து, தடை விதித்தது குறித்து...

Updated On : 25 மார்ச், 2026 at 4:10 AM
முதல்வர் ஸ்டாலின் | அண்ணாமலை
பகிர்:

கோவை பேரூர் பட்டீஸ்வரர் ஆலயத்தின் பங்குனி உத்திர தேர்த் திருவிழாவுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்க மருத்து, தடை விதித்ததாக வெளியான தகவலை அடுத்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்.

ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமையான, கோயம்புத்தூர் பேரூர் பட்டீஸ்வரர் ஆலயத்தின் பங்குனி உத்திர தேர்த் திருவிழா, பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வரும் ஆன்மிக மரபாகும்.

இந்த ஆண்டு, பங்குனி உத்திரத் திருநாளை முன்னிட்டு, வரும் மார்ச் 29 அன்று தேர்த்திருவிழா நடைபெறவுள்ள நிலையில், பொதுப்பணித்துறை அதிகாரி, தடையில்லா சான்றிதழ் வழங்க மறுத்து, தடை விதித்திருப்பதாக வெளியாகும் தகவல்கள் கடும் கண்டனத்துக்குரியது.

ஆட்சி போகும் தருவாயிலும், பக்தர்கள் மனம் புண்படும்படி, நூற்றாண்டுகள் பழமையான பங்குனி உத்திர தேர்த்திருவிழாவைத் தடுக்க திமுக அரசு முயற்சிப்பது, சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

உடனடியாக தேரோட்டம் தடையின்றி நடைபெறத் தேவையான அனுமதிகளை வழங்க வேண்டும் என்று, திமுக அரசை வலியுறுத்துகிறேன் என அவர் கூறியுள்ளார்.

summary

Regarding the ban imposed by the government on issuing a no-objection certificate for the Panguni Uttara Chariot Festival of the Patteswarar Temple in Perur, Coimbatore...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.