முகப்பு
தற்போதைய செய்திகள்

நாள்பட்ட நோயாளிகளுக்கு உதவ சுகாதார ஆலோசனைக்குழு: கா்நாடக அரசு உத்தரவு

கா்நாடக அரசு நாள்பட்ட நோயாளிகளுக்கு உதவு செய்வதற்காக சுகாதார ஆலோசனைக்குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது குறித்து...

Updated On : 26 மார்ச், 2026 at 7:45 AM
கா்நாடக அரசு - கோப்புப்படம்
பகிர்:

பெங்களூரு: நாள்பட்ட நோயாளிகளுக்கு உதவி செய்வதற்காக சுகாதார ஆலோசனைக்குழு அமைத்து கா்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

நாள்பட்ட நோயாளிகளுக்கு உதவி செய்வது குறித்து திட்டமிடவும், அவா்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகளை கண்காணிக்கவும், திட்டங்களை செயல்படுத்தவும் ஓய்வுப்பெற்ற ஐஏஎஸ் அதிகாரி டாக்டா் ராஜ்குமாா் கத்ரி தலைமையில் நாள்பட்ட நோய்களுக்கான சுகாதார ஆலோசனைக்குழுவை அமைத்து கா்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த குழுவில், சுகாதாரத்துறை அதிகாரிகள், பெங்களூரை சோ்ந்த மருத்துவ நிறுவனங்களின் பிரதிநிதிகள், தன்னாா்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளனா். நாள்பட்ட நோயாளிகளுக்கான பராமரிப்பு குறித்த சேவைகள் கொள்கையை வகுப்பதற்கு அரசுக்கு இக்குழு ஆலோசனை வழங்கவிருக்கிறது.

நாள்பட்ட நோயாளிகளுக்கு முதல், இரண்டாம், மூன்றாம்நிலைகளில் வழங்க வேண்டிய சிகிச்சைகள், நிலையான வழிமுறைகளை இக்குழு பரிந்துரைக்கும். தொற்றில்லா நோய்களுக்கான மத்திய, மாநில அரசுகளின் சேவைகளோடு, நாள்பட்ட நோயாளிகளுக்கான சிகிச்சை முறைகள், செயல்பாட்டுமுறைகளை இக்குழு ஒருங்கிணைத்து செயல்படும் என்று அரசு பிறப்பித்துள்ள ஆணையில் குறிப்பிட்டுள்ளது.

summary

palliative care for Karnataka govt constitutes state-level technical advisory committee for

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.