லைஃப்ஸ்டைல்

மலாய்க்கா அரோராவின் கூல்கூல் ஜாலி ஃபோட்டோஸ்...!

கவலைப்பட்டுக்கொண்டு நாட்களை சலிப்போடு கழிக்காமல் குழந்தைகளோடு டூர் போய் ஜாலியாக இருங்கள்...

கார்த்திகா வாசுதேவன்

உயிரே படத்தில் 'தைய்ய தைய்யா' பாடலுக்கு ஷாரூக்குடன் வேகமான நடன அசைவுகளைத் தந்து ஒட்டுமொத்த ரசிக உள்ளங்களையும் கொள்ளை கொண்ட 'மலாய்க்கா அரோராவை' யாரும் மறந்திருக்க முடியாது.விடுமுறையைக் கொண்டாட தன் மகனோடு மலேசியா போன மலாய்க்கா அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்ட்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அம்மாவும் மகனுமாக ஜாலி ஹோலி பயணம்.மலேசியக் கடற்கரையில் வண்ண மயமாக இவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் ஒவ்வொன்றும் கண்களைக் குளிர்விக்கிறது. இது இந்த வார வைரல் ஹிட்!

முதன் முதலில் தனது இந்நாள் கணவரும் முன்னாள் சக நடிகருமான ’அர்பாஸ்கானுடன்’ ஐட்டம் நம்பர் பாடல்களுக்கு ஆடக் கூடியவராக அறிமுகமான ’மலாய்க்கா’ பின்னாளில் அவரையே திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் கணவருக்கும் தனக்குமான உறவை ரத்து செய்து விட்டதாக அறிவித்து செம கூலாக மகனோடு மலேசியாவுக்குப் போய் ஆழ்கடல் நீச்சல்,பீச் யோகா,ஸ்கூபா டைவிங் என்று கொண்டாடித் திரும்பி இருக்கிறார். உறவு முறை வட்டாரங்களில் என்ன பிரச்சினை என்றாலும் அதை பற்றி எல்லாம் கவலைப் பட்டுக்கொண்டு நாட்களை சலிப்போடு கழிக்காமல் குழந்தைகளோடு டூர் போய் ஜாலியாக இருங்கள் என்று மலாய்க்கா சொல்வதாக நாம் நினைத்துக் கொள்ள வேண்டியது தான்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழங்குடி மக்களின் பாதங்களைக் கழுவிய பாஜக பெண் எம்எல்ஏ!

இலங்கை அபார பந்துவீச்சு; பில் சால்ட்டின் அரைசதம் இங்கிலாந்தின் வெற்றிக்கு போதுமானதா?

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

SCROLL FOR NEXT