கலைகள்

கம்போடியாவில் தமிழுக்குப் பெருமை

மாலதி சந்திரசேகரன்

கம்போடியாவில், உலகக் கவிஞர்கள் மாநாடு, செப்டம்பர் 21 முதல் 25 வரை நடந்து முடிந்தது. 

முன்னதாக 21.09.2019 அன்று கம்போடியா அங்கோர் தமிழ் சங்கம், பன்னாட்டுத் தமிழர் நடுவம் நடத்திய உலகக் கவிஞர் மாநாடு முதலாம் நாள் நிகழ்வில் வானம் தொடும் வண்ணத்துப்பூச்சிகள்  தன்முனைக் கவிதைகள் - 52 கவிஞர்கள் தொகுப்பு சிறப்பாக வெளியிடப்பட்டது. கம்போடிய பண்பாட்டுத்துறை இயக்குனர் மோர்ன் செப்பீப் வெளியிட மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்க தலைவர் இராசேந்திரன் பெற்றுக்கொண்டார். பாடலாசிரியர் விவேகா முன்னிலையில் வெளியானது.

22/09/2019 அன்று உலகத் தமிழ்க் கவிஞர்கள் மாநாட்டில் அங்கோர் தமிழ் சங்கம் பன்னாட்டு தமிழர் நடுவம் மற்றும் கம்போடிய கலை பண்பாட்டுத் துறை அமைச்சகம் இணைந்து 'சர்வதேச இளங்கோவடிகள் விருது' கவிச்சுடர் கா.ந.கல்யாணசுந்தரம் அவர்களுக்கு வழங்கப்பட்டது. விருதளித்தவர், கம்போடிய பண்பாட்டுத்துறை இயக்குனர் மோர்ன் சொபீப் அவர்கள். கவிஞர் விவேகா மற்றும் அங்கோர் தமிழ் சங்க நிர்வாகிகள் உடனிருந்தார்கள். 

தன்முனைக்கவிதைகளுக்கு பன்னாட்டு மேடையில் அங்கீகாரம் கொடுத்தது தமிழுக்கும் நமக்கும் பெருமை.மேடையில் கவிஞர்கள் சுமதிசங்கர், அன்புச்செல்வி சுப்புராஜ் , இர.தர்மாம்பாள் மற்றும் ஓசூர் மணிமேகலை ஆகியோருக்கு சான்றுகள் வழங்கப்பட்டன. (இவர்கள் தன்முனைக்கவிதைகள் எழுதிய கவிஞர்களில் ஐவர்)  முனைவர் பேரா.மறைமலை இலக்குவனார், முஸ்தபா, மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்க தலைவர் இராசேந்திரன், கருமலை தமிழாழன், ஓசூர் மணிமேகலை, மலர்வண்ணன், வணங்காமுடி, உமையவன், ரோகினி,யோ புரட்சி, கஸ்தூரி மற்றும்  பாடலாசிரியர்கள் இந்துமதி, அஸ்மின், கவிரிஷி மகேஷ், ரவி தமிழ்வாணன் உள்ளிட்ட பல கவிஞர்கள் கலந்து கொண்டனர். 

விழாவில் இந்தியா  மலேசியா சிங்கப்பூர் சுவிஸ் இலங்கை மொரீடியஸ் மற்றும்  வளைகுடா நாடுகளைச்சேர்ந்த கவிஞர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை பன்னாட்டு தமிழர் நடுவத்தின் தலைவர் சித்தர் திருத்தணிகாசலம், அங்கோர் தமிழ் சங்க தலைவர் சீனிவாசராவ், செயலர் ஞானசேகரன் மற்றும் துணைத்தலைவர் ரமேஷ்வரன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். கவிஞர்களுக்கு இரண்டு நாள் சுற்றுலாவும் ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

- மாலதி சந்திரசேகரன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT