அழகே அழகு

ஷாம்பூ விளம்பர மாடல் போல அழகான கூந்தல் பெற டிப்ஸ்!

கார்த்திகா வாசுதேவன்

ஷாம்பூ,சிகைக்காய் விளம்பர மாடல்கள் போல அடர்த்தியான நீளமான தலைமுடி வேண்டும் என்ற ஆசை யாருக்குத் தான் இல்லை?! அதற்கு முதலில் தலைமுடி கொட்டாமல் இருக்க வேண்டுமே?! அப்புறம் தானே விதம் விதமாய் டிரெண்டுக்குத் தகுந்தவாறு கூந்தலை அலங்கரித்துக் கொள்ள முடியும்... முதலில் உடல் நலன், மன நலன் போல தலைமுடியையும் போஷாக்கானதாக மாற்ற என்ன செய்யலாம் என்று பார்க்கலாமா?!

  • காய்கறிகள், பழங்கள் என்று சத்தான உணவுகளைத் தேடிச் சாப்பிட வேண்டும்; 
  • புரோட்டின் நிறைந்த உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிடப் பழக வேண்டும்.
  • நாளொன்றுக்கு 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் அருந்துங்கள்.
  • தரமான ஹேர் ஆயில் கொண்டு வாரம் இருமுறை தலைமுடியை மசாஜ் செய்யுங்கள்.
  • தலைமுடி முற்றிலும் ஈரத் தன்மை இழந்து வறண்டு போகாமலிருக்க கண்டீஷனர்களைப் பயன்படுத்த மறக்க வேண்டாம்.
  • கிரீன் டீ உடல் நலனுக்கு மட்டுமல்ல தலைமுடிக்கும் நல்லதே. இரண்டு பாக்கெட் கிரீன் டீத்தூளை ஒரு கப் நீரில் காய்ச்சி வடிகட்டி ஆற வைத்து அதை கூந்தலில் தேய்த்து ஊற வைத்து அரை மணி நேரத்துக்குப் பின் அலசி உலர்த்தவும்.
  • இன்றைய நாட்களில் காற்றில் மாசு அளவு அதிகம் என்பதால் தினமும் பள்ளி, கல்லூரி, அலுவலகம் என்று வீட்டிலிருந்து வெளியில் சென்று திரும்பும் அவசியமுள்ளவர்கள் வாரம் இரண்டு நாட்கள் என்றில்லாமல் தினமும் தலைக்குக் குளிக்கும் பழக்கத்தை மேற்கொள்ளலாம்.
  • தலைக்கு குளிக்கச் செல்லும் முன் தலைமுடியை சிக்கலின்றி வாரிக் கொள்ள வேண்டும். இதனாலும் முடி உதிர்வைத் தடுக்கலாம்.
  • நமது தலைமுடியின் தன்மைக்குப் பொருத்தமான ஷாம்பூவை தேர்ந்தெடுக்க வேண்டும். இது நமது கூந்தல் வறண்டதா? எண்ணெய்ப்பசையுடையதா? இயல்பானதா? என்பதைப் பொறுத்தது.
  • வெந்நீரில் தலைக்கு குளிப்பதை தவிர்க்கலாம். அதிகக் குளிர்ச்சியும் வேண்டாம். குழாயில் வரும் நல்ல தண்ணீர் போதும் தலைக்கு குளிக்க.
  • உப்புத் தண்ணீர் குளியலைத் தவிர்க்கலாம்.
  • ஈரமான கூந்தல் உலர்வதற்கு முன் தலைமுடியை சீப்பால் சீவக் கூடாது.
  • தலைமுடிக்கும் காற்றோட்டமும், சுவாசமும் தேவை எனவே வெள்ளைக்காரர்கள் போல நினைத்துக் கொண்டு சாதாரண நாட்களிலும் தொப்பி அணிந்து கொண்டே இருக்க வேண்டுமென்பதில்லை.
  • தலைமுடியை உலர்த்த டிரையர் பயன்படுத்தக் கூடாது. டவலாலும் அழுத்தித் துடைக்கக் கூடாது. இயற்கையாக கூந்தலை உலரச் செய்ய வேண்டும்.
  • உச்சி முதல் உள்ளங்கால் வரை உடலின் அத்தனை பகுதிகளும் சீராக இருக்க உடற்பயிற்சி அவசியம். கூந்தல் நலனுக்கும்  சேர்த்துத்தான்.

மேலே சொன்ன டிப்ஸ் எல்லாவற்றையும் தவறாமல் பின்பற்றிப் பாருங்கள். நிச்சயம் நல்ல பலனை உணரலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் முழு பட்ஜெட்டிற்கான பணிகள்: நிர்மலா சீதாராமன்

விரைவில் விசாரணை: ஆடியோ விவகாரம் குறித்து புகாரளித்த கார்த்திக் குமார்!

முடிவுக்கு வருகிறது 'ரீடர்ஸ் டைஜஸ்ட்' பிரிட்டிஷ் பதிப்பு!

வெள்ளப் பெருக்கு: குற்றால அருவிகளில் குளிக்கத் தடை

"தென் - வட மாநில மக்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்த முயற்சிக்கிறார் மோடி "

SCROLL FOR NEXT