அழகே அழகு

முகத்தில் ஆரம்ப நிலையில் இருக்கும் சுருக்கங்களை நீக்க என்ன செய்யலாம்?

சி.ஆர்.ஹரிஹரன்

• வெள்ளரிக்காயையும், கேரட்டையும் மிக்ஸியில் நன்றாக அரைத்து முகத்தில் பூசி அரைமணி நேரம் விட்டு காய்ந்தபின் கடலைமாவு கொண்டு கழுவிவிட முகத்தில் உள்ள புள்ளிகள் மறைய ஆரம்பிக்கும்.

• ஒரு தேக்கரண்டி துளசி இலையின் சாற்றுடன் அரை தேக்கரண்டி தேன் கலந்து தினமும் காலை வேளையில் சாப்பிட்டு வந்தால் தோல் மினுமினுப்பாக மாறும்.

• தேன் மற்றும் எலுமிச்சைச் சாறு கலந்த கலவையை உதட்டின் மீது தொடர்ந்து தடவி வந்தால் தரம் குறைந்த லிப்ஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் கருமை நிறம் குறைந்து விடும்.

• சிறிதளவு பால் மற்றும் ஒரு தேக்கரண்டி காலிஃப்ளவர் சாறு, ஒரு தேக்கரண்டி முள்ளங்கிச்சாறு சேர்த்து முகம் பூராவும் பூசி பத்து நிமிடம் கழித்து முகத்தை நன்றாக கழுவினால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மறைந்து முகம் பளப்பளப்பாகும்.

• கிளிசரினும், தேனும் கலந்து முகத்தில் தடவி கொஞ்ச நேரம் மசாஜ் செய்து இரவு பூராவும் விட்டுவிட்டு காலையில் அலம்பவும். முகம் இளமையாகவும் வசீகரமாக மாறும்.

• பப்பாளிப் பழச்சாறுடன் காய்ச்சாத சாதாரண பால் அல்லது தயிரின் மேல் இருக்கும் ஆடையை எடுத்து நன்றாக பேஸ்ட் போல் கலந்து முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மீது போட்டு வந்தால் ஆரம்ப நிலையில் இருக்கும் சுருக்கங்கள் காணாமல் போய்விடும்.

• முழங்கை (முட்டி) கருப்பாகவும், சொரசொரப்பாகவும் இருந்தால் தேங்காய் எண்ணெய்யுடன் எலுமிச்சைச் சாறு கலந்து தடவி வர மிருதுவாக மாறும்.
- சி.ஆர்.ஹரிஹரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காந்தாரி.. ஈஷா ரெப்பா!

ஸ்ரீரங்கம் தேரோட்டம் கோலாகலம்!

நேரத்தை மிச்சப்படுத்தும் ஏஐ : 94% பணியாளர்களின் கருத்து என்ன?

சென்னை-நாகர்கோவில் சிறப்பு ரயில் 19 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

ஆயிரம்விளக்கு அருகே பூங்காவில் சிறுமியை கடித்த வளர்ப்பு நாய்கள்

SCROLL FOR NEXT