அழகே அழகு

உங்கள் நகத்தை மிக அழகாக பராமரிக்க உதவும் சில டிப்ஸ்!

விரல்கள் மற்றும் நகங்கள் சொரசொரப்பு நீங்கி பளபளப்பாக்க, நல்லெண்ணெய்யைக் கொண்டு மசாஜ் செய்யலாம்.

சி.பன்னீர்செல்வம்

விரல்கள் மற்றும் நகங்கள் பளபளப்பாக இருக்க தினமும் நல்லெண்ணெய்யைக் கொண்டு மசாஜ் செய்யலாம். சொரசொரப்பு நீங்கி சுத்தமாக இருக்கும் நகங்களே அழகு. நகங்களை எப்படி பராமரிப்பது என்று பார்க்கலாம்.

நகம் கருமையுடன் சொத்தையாகி இருந்தால் துத்தி இலையை சாம்பிராணியுடன் சேர்த்து அரைத்து பற்று போட்டு வந்தால் விரைவில் சொத்தை மறையும்.

உடலில் கால்சியம் சத்து குறைவதால் நகங்கள் பாதிக்கப்படுகிறது. கால்சியம் மாத்திரைகளையோ அல்லது கால்சியம் சத்து நிறைந்த உணவுகளையோ உட்கொள்ள வேண்டும்.

நகங்களைச் சுற்றி தடித்த வலியிருந்தால் வெதுவெதுப்பான நீரில் டெட்டால், பெப்பர் மின்ட் ஆயில் சேர்த்து சிறிது நேரம் ஊற வைத்து கழுவினால் வலி நீங்கி நகம் சுத்தமாகும்.

ஆலிவ் எண்ணெய்யை லேசாக சூடாக்கி விரல்களின் மீது தேய்த்து ஊற வைத்தால் நகங்கள் உடையாமல் இருக்கும்.

வெற்றிலையில் சிறிதளவு சுண்ணாம்பு கலந்து அரைத்து நகத்தில் கட்டினால் நகச் சுத்தி சரியாகும்.

வெள்ளை ஜெலட்டின் (கால்சியம் சத்துள்ளது) இரண்டு ஸ்பூன் எடுத்து நான்கு ஸ்பூன் இளஞ்சூடான நீரில் கரைத்து விரல்களின் மீது பூசி தேய்த்து பத்து நிமிடங்கள் கழித்து கழுவி வர நகங்கள் உடையாது.

முருங்கைக்கீரை, பப்பாளி, மாம்பழம், பேரீச்சம் பழம் போன்ற உணவு வகைகள் நகத்தை பாதுகாக்க உதவும்.

இளஞ்சூடான நீரில் துளசி மற்றும் புதினாவை போட்டு விரல்களை பத்து நிமிடம் வைத்தால் கிருமிகள் இறந்து நகம் சுத்தமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 2 மணி நேரத்துக்கு 16 மாவட்டங்களில் மழை!

மேட்டூர் அணை நிலவரம்!

சொல்லப் போனால்... ராகுல், தேர்தல் ஆணையம், டிரம்ப்... அல்லோலகல்லோலம்!

இந்தியா எந்த அச்சுறுத்தலுக்கும் அடிபணியாது: வெங்கையா நாயுடு

என்எல்சி நிகர லாபம் ரூ.839.21 கோடி

SCROLL FOR NEXT